`ஷூ' விநியோகம் அமேதியில் அமோகம்! - ஸ்மிருதி இரானியின் தேர்தல் வியூகம் | smriti irani distributes shoe in amethi constituency stirs controversy

வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (24/04/2019)

கடைசி தொடர்பு:18:38 (24/04/2019)

`ஷூ' விநியோகம் அமேதியில் அமோகம்! - ஸ்மிருதி இரானியின் தேர்தல் வியூகம்

தேர்தல்

இந்தியாவின் முக்கிய பொதுத் தேர்தல் தொகுதிகளில் உத்தரப் பிரதேசத்தின் அமேதியும் ஒன்று. நடப்புத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து ராகுல் காந்தியும் பாரதிய ஜனதா சார்பில் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகின்றனர். வருகின்ற மே மாதம் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவில் அங்கே தேர்தல் நடக்க இருக்கிறது. 

இந்தநிலையில் அந்தத் தொகுதிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஸ்மிருதி இரானி அங்கு வசிக்கும் மக்களுக்கு 'ஷூ' கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தான் பிரசாரம் செல்லும்போது சில மக்கள் வெறும் காலில் பயணிப்பதைப் பார்த்ததாகவும் அது தனக்கு மிகுந்த மன வேதனை அளித்ததாகவும் அதனால்தான் தான் 'ஷூ' வாங்கிக் கொடுத்ததாகவும் கூறினார்.

ஸ்மிருதியின் இந்தத் தேர்தல் பிரசார யுக்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஹரிஹரபுர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இதனால் கொதித்தெழுந்துள்ளனர். ``இரானி எங்களுக்கு ரூ.25,000 மதிப்பிலான `ஷூ' வாங்கிக் கொடுத்ததாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார். மேலும், எங்களுக்கு வாழ வீடுகூட இல்லை என்று எல்லோரிடமும் கூறிக் கொண்டிருக்கிறார். இத்தனை வருடங்களாக இந்தப் பகுதி பக்கம் வராதவர் ஒரே ஒரு முறை வந்து எட்டிப் பார்த்துவிட்டு எங்களுக்கு வீடில்லை என்று எப்படிச் சொல்ல முடியும். மேலும் அவர் `ஷூ' வாங்கிக் கொடுப்பதால் மட்டும் எங்களுடைய பிரச்னை தீர்ந்துவிடுமா. காலுக்கு அணியும் `ஷூ'தானா எங்களுக்கு முக்கிய பிரச்னை?" என்று கடுகடுத்துள்ளனர். 

ஸ்மிருதியின் இந்தச் செயலை காங்கிரஸின் பிரியங்கா காந்தியும் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், ``ஸ்மிருதி அவர்களுக்கு `ஷூ' வாங்கிக் கொடுத்திருப்பது மிகவும் அருவருப்பான செயல். மக்களைப் பிச்சைக்காரர்கள் போல மதிக்கும் அவர் செயல் கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.

ஆனால், அமேதி பாரதிய ஜனதா கட்சித் தரப்போ, ``மக்கள் அனைவரும் காங்கிரஸின் தூண்டுதலின் பேரில்தான் இப்படிச் செய்கிறார்கள்" என்று கூறி வருகின்றனர்.

தேர்தல் ரகசியம் ``ஷூஊஊஊஊஊஊ"

நீங்க எப்படி பீல் பண்றீங்க