`உங்கள் மனைவி அனைத்து கோபத்தையும் என் மீது காட்டிவிடுகிறார்’ - அக்‌ஷய்யிடம் கலகலத்த மோடி | I have a rather positive way of looking at this Akshay's wife on twitter

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (24/04/2019)

கடைசி தொடர்பு:18:35 (24/04/2019)

`உங்கள் மனைவி அனைத்து கோபத்தையும் என் மீது காட்டிவிடுகிறார்’ - அக்‌ஷய்யிடம் கலகலத்த மோடி

இன்று காலை முதல் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டிதான். ஆங்கில ஊடகமான ஏ.என்.ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில் அரசியல் அல்லாத தன் சொந்த விஷயங்கள், இளமைக் காலம், தாய், நண்பர்கள் போன்ற தன் வாழ்வில் நடந்த அனைத்து சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றியும் பகிர்ந்துள்ளார். 

அக்‌ஷய் - மோடி

டெல்லியில் உள்ள பிரதமரின் வீட்டில் நடந்த பேட்டியில் அவரை நேர்காணல் செய்தவர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். இன்று சமூகவலைதளத்தில் இவர்கள் இருவர் தான் ஹிட் டாபிக்.

அந்தப் பேட்டியின் ஒரு இடத்தில் பேசியுள்ள மோடி, `` நான் சமூகவலைதளங்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் உள்ளேன். நாட்டில் என்ன நடக்கிறது என்று அனைத்து விஷயங்களும் எனக்குத் தெரியும். ட்விட்டரில் உங்களையும் (அக்‌ஷய் குமார்) உங்கள் மனைவி ட்விங்கிள் கண்ணாவையும் பின் தொடர்ந்து வருகிறேன். ட்விங்கிள் என் மீது கோபத்தில் உள்ளார் என நினைக்கிறேன். உங்கள் வீட்டில் எப்போதும் அமைதி மட்டுமே நிலவும் ஏனெனில் உங்கள் மனைவிக்குக் கோபம் வந்தால் அவை அனைத்தையும் என் மீது காட்டி விடுகிறார்’ எனக் கூறி கலகலத்துள்ளார். 

அக்‌ஷய் - ட்விங்கிள் கண்ணா

மோடி கூறிய இந்த வார்த்தைகளைத் தேசிய பா.ஜ.க தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதை டாக் செய்து ட்விங்கிள் கண்ணா வெளியிட்டுள்ள பதிவில், `இதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன். பிரதமர் மோடிக்கு என்னைத் தெரிந்திருப்பது மட்டுமல்லாது நான் பதிவிடும் கருத்துகளையும் படித்துள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அக்‌ஷய் மனைவியின் இந்தப் பதிவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.