`பலனை அனுபவிக்க வேண்டியது வரும்!'- பிரசாரத்தில் மம்தாவை சாடிய மோடி | Modi calls out for people to teach lesson to mamta banerjee

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (24/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (24/04/2019)

`பலனை அனுபவிக்க வேண்டியது வரும்!'- பிரசாரத்தில் மம்தாவை சாடிய மோடி

மோடி

பிரதமர் மோடி உடனான நடிகர் அக்ஷய் குமாரின் நேர்காணல் மிகவும் பரபரப்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளில் தனக்கு நண்பர் உண்டு என்றும், தான் அனைத்து பற்றையும் துறந்துவிட்டதாகவும் தனக்குக் கோபமே வராது எனவும் பல விஷயங்களை அவர் அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். 

குறிப்பாக ``எதிர்க்கட்சிகளில் எனக்கு நண்பர் உண்டு. ஒருமுறை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா எனக்கு இனிப்புகள் அனுப்பியதைப் பார்த்துவிட்டு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் எனக்கு இனிப்புகள் அனுப்பத் தொடங்கினார். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அதுமட்டுமில்லை. ஒவ்வொரு வருடமும் அவராகவே தேர்ந்தெடுத்து எனக்கு குர்தாக்களை அனுப்பி வைப்பார். இந்த முறைகூட அனுப்பியுள்ளார் எனப் பேசியிருந்தார். இதற்கிடையே ஒன்பது கட்ட வாக்குப் பதிவுகளையும் சந்திக்கும் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், மம்தா தன் செயல்களுக்கு விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் எனப் பேசியுள்ளார். 

மேற்கு வங்கத்தின் போல்பூரில் இருந்து பேசியுள்ள அவர், ``திதியிடம் (மம்தா பனர்ஜி) அடியாட்கள் பலம் இருக்கிறது என்றால், எங்களிடம் ஜனநாயகத்தின் பலம் இருக்கிறது. அதிகாரத்தை அதிகம் கையில் எடுத்துக்கொண்டால் அதற்கான பலனை திதி சந்திக்க வேண்டி இருக்கும்" என பேசியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க