பி.ஜே.பி டு காங்கிரஸ்! - கட்சி தாவும் எம்.பி-க்கள் | Bjp mp join udit raj join congress

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (24/04/2019)

பி.ஜே.பி டு காங்கிரஸ்! - கட்சி தாவும் எம்.பி-க்கள்

ந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று கட்டங்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், அரசியலில் கட்சித் தாவல்கள் இன்னும் முடிந்தபாடில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் வடமேற்கு டெல்லி தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர் உதித் ராஜ். இந்தத் தேர்தலிலும் அதே தொகுதியில் பி.ஜே.பி சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் பி.ஜே.பியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

காங்கிரஸில் இணைந்த எம்.பி உதித்ராஜ்

சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அரசியலில் ஈடுபட உள்ளதாகக் கூறி பி.ஜே.பி-யில் இணைந்தார். இந்த நிலையில், அவருக்குக் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இது  மாதிரியான பிரபலங்கள் பி.ஜே.பி-யில் இணைந்தது உதித் ராஜுக்கு சீட் வழங்கப்படாமல் இருந்ததற்கான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றது. அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு பீகாரில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான பட்டியலை பி.ஜே.பி வெளியிட்டது. அப்போது பாட்னா சாகிப் தொகுதி, நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் சத்ருகன் சின்ஹாவும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.