`நல்ல படங்களுக்காக பொறுமையுடன் காத்திருக்கேன்!'- நடிகை சாந்தி கிருஷ்ணா | actress shanthi krishna talks about her personal life

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:13:00 (25/04/2019)

`நல்ல படங்களுக்காக பொறுமையுடன் காத்திருக்கேன்!'- நடிகை சாந்தி கிருஷ்ணா

சாந்தி கிருஷ்ணா

`பன்னீர் புஷ்பங்கள்' சாந்தி கிருஷ்ணாவை, தமிழ் ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாது. தமிழ் சினிமாவைக் காட்டிலும், மலையாளத்தில் அதிகம் புகழ்பெற்றவர். தற்போது மலையாள சினிமாக்களில் மட்டும் நடித்துவருபவர், பெங்களூருவில் வசித்துவருகிறார். தற்போதைய செயல்பாடுகள் குறித்து, சாந்தி கிருஷ்ணாவிடம் பேசினோம்.

சாந்தி கிருஷ்ணா

``ஹீரோயினா இருந்தப்போ, மாறுபட்ட நடிப்புக்கு நிறைய ஸ்கோப் இருந்துச்சு. நான் ரீ-என்ட்ரி கொடுத்தப்போ, மலையாள சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. பட வாய்ப்புகளும் நிறைய வந்துச்சு; தொடர்ந்து வருது. ஆனா, மனசுக்கு நிறைவான, ஆக்டிங்குக்கு ஸ்கோப் இருக்கிற மாதிரியான படங்கள் வருவதில்லை. அதனால எனக்கு வருத்தம் உண்டு. தமிழில் `நேருக்கு நேர்' படத்துக்குப் பிறகும், இதுவரை நல்ல வாய்ப்புகள் வரலை. இப்போ நடிக்க ஆர்வம் இருப்பதால், நல்ல படங்களுக்காக பொறுமையுடன் காத்திருக்கேன். ஒருகாலத்தில் டான்ஸ்தான் என் பிரதான அடையாளமா இருந்துச்சு. இப்போ அபார்ட்மென்ட் வீட்டில் வசிப்பதால், டான்ஸ் ஆடுறதுக்கும் பிரச்னைகள் வருது. நடிப்பு, குடும்பம் மட்டும்தான் இப்போதைக்கு என் பிரதான வேலைகள். பையன் அமெரிக்காவில் காலேஜ் படிக்கிறான். பொண்ணு ஒன்பதாவது முடிச்சிருக்காள். என் குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கேன். ஆனாலும், எப்போதுமே பொறுப்புள்ள அம்மாவாக இருக்கேன் என்பதால் மன நிறைவுடன் இருக்கேன்" எனப் புன்னகைக்கிறார், சாந்தி கிருஷ்ணா.