`மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராகுல்தான் பொறுப்பு!' - அரவிந்த் கெஜ்ரிவால்  | If modi wins, Rahul is responsible, says arvind kejriwal

வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (25/04/2019)

கடைசி தொடர்பு:16:10 (25/04/2019)

`மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராகுல்தான் பொறுப்பு!' - அரவிந்த் கெஜ்ரிவால் 

ந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல்கள் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலுக்கான முடிவுகளானது மே 23-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் ஒன்றாகக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 1-ம் தேதி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பி.ஜே.பி ஏப்ரல் 8-ம் தேதி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

அரவிந் கெஜ்ரிவால்

தற்போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளனர். டெல்லியில் ஒரே கட்டமாக மே மாதம்12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர். அந்த நிகழ்வில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ``மத்தியில் மீண்டும் மோடி, அமித் ஷா தலைமையிலான பி.ஜே.பி-யின் ஆட்சித் தொடர்ந்தால் அதற்குக் காரணம் ராகுல் காந்திதான்’’ எனக் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதற்கு கெஜ்ரிவால் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் விவசாய பிரச்னைகளுக்கான தீர்வுகள், டெல்லி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முழுமையான மாநில அந்தஸ்து பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் போன்ற வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.


அதிகம் படித்தவை