`சியர்ஸ், ஒரு வீடியோ கால்! - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன் | A video call from wife cost ND Tiwari’s son losses his life

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (25/04/2019)

கடைசி தொடர்பு:20:10 (25/04/2019)

`சியர்ஸ், ஒரு வீடியோ கால்! - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்

கொழுந்தியாளுடன் மது அருந்திய வீடியோவைப் பார்த்ததால், என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் மனைவியின் கையால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

என்.டி. திவாரி மருமகள்

உத்தரப்பிரதேச மாநில முதல்வராகவும் ஆந்திரா ஆளுநராகவும் இருந்தவர் என்.டி. திவாரி. ஆந்திர ஆளுநராக இருந்தபோது, பாலியல் புகாரில் சிக்கினார்.  பிறகு என்.டி. திவாரி அரசியலில் இருந்து லிலகினார். மனைவியால் கொல்லப்பட்ட ரோஹித் தன் தந்தை என்.டி. திவாரி என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தில் நீண்ட காலம் போராடியவர் ஆவார். டி.என்.ஏ பரிசோதனைக்குப் பிறகே ரோஹித்தை என்.டி திவாரி மகனாக ஏற்றுக்கொண்டார்.  டெல்லியில் உள்ள டிபென்ஸ் காலனியில் வசித்துவந்த ரோஹித் ஓட்டு போடுவதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  தன் சொந்த ஊரான கத்கோடம் என்ற இடத்துக்கு காரில் சென்றுள்ளார்.

கடந்த 15-ம் தேதி என்.டி. திவாரி மனைவி உஜ்ஜாலா மற்றும் மனைவியின் ஒன்றுவிட்ட தங்கை மற்றும் பணியாளர்களுடன் 3 கார்களில்  சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்துள்ளார். காரின் பின் சீட்டில் ரோஹித் தன் கொழுந்தியாளுடன் அமர்ந்து வந்துள்ளார். அப்போது, கோலு என்ற பணியாளர் இருவருக்கும் கிளாஸில் மது ஊற்றித் தந்துள்ளார். இந்தச் சமயத்தில் ரோஹித்தின் வழக்கறிஞர் மனைவி அபூர்வா, கணவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, ரோஹித்தின் அருகில் கொழுந்தியாள் முறை கொண்ட பெண் இருந்ததைக் கண்டு கடும் ஆத்திரம் கொண்டார் அபூர்வா. ஏற்கெனவே இந்தப் பெண்ணுடன் கணவர் சேர்ந்து செல்வதும் அபூர்வாவுக்குப் பிடிக்காமல் இருந்துள்ளது. 

இரவு 10 மணியளவில் ரோஹித்  வீட்டை அடைந்துள்ளார். இரவு உணவுக்குப் பிறகு, ரோஹித் படுத்துவிட்டார். இரவு 12.45 மணி வரை அபூர்வா டி.வி பார்த்துக்கொண்டிருந்துள்ளார். பின்னர், கணவரின் அறைக்குச் சென்று `அந்தப் பெண்ணுடன் மது அருந்தியது ஏன் ' என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.  அப்போது, ரோஹித் `தானும் அந்தப் பெண்ணும் ஒரே கிளாஸில் மது அருந்தினோம்  உனக்கென்ன' என்று  கோபத்துடன் கூறியுள்ளார். அவ்வளவுதான்... கோபம் தலைக்கேறிய அபூர்வா படுக்கையின் மீது பாய்ந்து கணவரை வெறும் கையாலேயே கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டார்.  கடந்த ஒரு வருடத்துக்கு முன்தான் ரோஹித்துக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மது அருந்தி வந்ததாலும் உடல் அளவில் பலவீனமான இருந்துள்ளார். இதனால், மனைவி தன்னைக் கொலை செய்யும்போது அவரால் எதிர்ப்புகூட காட்ட முடியவில்லை. கணவரை வெறுங்கையாலேயே கொன்றுவிட்டு சத்தமில்லாமல் அறையைவிட்டு வெளியேறி தன் அறைக்குச் சென்றுவிட்டார் அபூர்வா

என்.டி. திவாரி மகன்

திலக் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த ரோஹித்தின் தாயார் 16-ம் தேதி காலையில் மகனிடம் பேச போனில் அழைத்தபோது அபூர்வா, `அவர் உறங்குகிறார் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று கூறி போன் இணைப்பைத் துண்டித்துள்ளார். பொதுவாகவே ரோஹித் காலையில் நீண்ட நேரம் கழித்து எழும் வழக்கமுடையவர். இதனால் வீட்டில் இருந்த பணியாளர் கோலுவுக்கு சந்தேகம் எழவில்லை. மாலை 3.30 மணியளவில் பணியாளர் கோலுவை அழைத்த அபூர்வா, ரோஹித்தை எழுப்புமாறு  கூறியுள்ளார். ரோஹித்தின் அறைக்குச் சென்ற கோலு, அவரின் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிந்ததைக் கண்டு கத்தினார். டெல்லி மேக்ஸ் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் ரோஹித் இறந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டனர். ரோஹித், வீட்டில் இறந்த சமயத்தில் கோலு, டிரைவர் அகிலேஷ் மற்றும் அபூர்வா மட்டுமே இருந்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என்றதும் போலீஸார் அபூர்வாவிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். முடிவில், கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அபூர்வா, தன் மண வாழ்க்கை இனிமையாக அமையவில்லை என்று தெரிவித்துள்ளார். கணவரைக் கொலை செய்த அபூர்வா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை