`கன்னையா குமாருக்காக விட்டுக்கொடுத்திருப்பேன்!'- நடிகர் பிரகாஷ் ராஜ் | shabana azmi and prakash raj campaigned for kanhaiya kumar in beghusarai

வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (26/04/2019)

கடைசி தொடர்பு:11:53 (26/04/2019)

`கன்னையா குமாருக்காக விட்டுக்கொடுத்திருப்பேன்!'- நடிகர் பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாததால் மக்களிடையே சாதி, மதச் சச்சரவைத் தூண்டிவிட்டு, அதில் அரசியல் செய்வதாக நடிகை ஷபானா ஆஷ்மி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலத்தின் பெகுசராய் தொகுதியில், பாரதிய ஜனதாவுக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னையா குமாருக்கு ஆதரவாகப் பேசுகையில், அவர் இதைத் தெரிவித்தார்.  

“பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து அரசியலுக்கு வந்தாலும், குட்டு வெளிப்படுவதற்கு நீண்ட நாள்கள் எடுக்கவில்லை. அதனால், இந்து, இஸ்லாமியர்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தி, அதில் அரசியல்செய்து பிழைக்கின்றனர்” என்றார் அவர்.

மேலும்,”கன்னையா குமார் போன்றவர்களுக்கு வாக்களிப்பதால் மட்டுமே நமது பன்மைத்துவம் மிக்க பாரம்பர்யம் காப்பாற்றப்படும். பொறுமையாக இருப்பவர்களுக்கே அத்தனையும் கைகூடும். நாம் பொறுத்திருந்து வெற்றிபெறுவோம். அந்தப் பக்கம் திருடர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள்” என்றார்.

கன்னையாவுக்கு ஆதரவான நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ”எனது நண்பர் கவுரி லங்கேஷைக் கொன்றவர்கள்தான் தற்போது சவுகிதார் எனப் பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை, நானும் கன்னையா குமாரும் ஒரே தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால், அவரே போட்டியிடட்டும் என நான் விட்டுக்கொடுத்திருப்பேன். அந்த அளவுக்கு இந்த இளைஞர் நம் தேசத்துக்கு முக்கியம்” என்று கூறினார். 

பெகுசராய் தொகுதி வரும் திங்கள் அன்று தேர்தலைச் சந்திக்கிறது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க