``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல!''- உண்மையை உடைத்த டாக்டர் | Surgery cured Sadhvi Pragya's cancer, not cow urine says doctor

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (26/04/2019)

கடைசி தொடர்பு:16:00 (26/04/2019)

``பிரக்யாவின் புற்று நோயை குணப்படுத்தியது கோமியம் அல்ல!''- உண்மையை உடைத்த டாக்டர்

பாரதிய ஜனதா கட்சியின் போபால் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்  சாத்வி பிரக்யா தாக்கூர். இவர், தன்னைத் தாக்கிய புற்று நோயை மாட்டு கோமியம் சாப்பிட்டு குணமடைந்ததாக சொன்னார். பிரக்யாவின் இந்தப் பேட்டியால் சர்ச்சை எழுந்தது. மருத்துவ உலகம் பிரக்யாவுக்கு எதிராகப் பொங்கி எழுந்தது. இந்த நிலையில், பிரக்யாவின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மூலமே குணப்படுத்தப்பட்டதாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் எஸ்.எஸ். ராஜ்புத் கூறியுள்ளார்

புற்றுநோய் பாதித்த பிரக்யா

பிரக்யாவுக்கு முதல் நிலை புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்ததாகவும் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டாக்டர் எஸ்.எஸ். ராஜ்புத் கூறுகையில், ``கடந்த 2008-ம் ஆண்டு மும்பை ஜேஜே மருத்துவமனையில் அவரின் வலது மார்பில் இருந்த கட்டி வெட்டி அகற்றப்பட்டது. போபாலில் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, பிரக்யாவின் வலது மார்பின் பெரும் பகுதி அகற்றப்பட்டது. உடலில் இருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு மும்பைக்குச் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், புற்றுநோய் பரவிக்கொண்டிருப்பது தெரியவந்தது. 2017-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த பிரக்யா, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இரு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றிக்கொண்டார்'' என்றார்.

பிரக்யா தாக்கூர் 2006-ம் ஆண்டு நடந்த மலகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டதும், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். உடனடியாக, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, கடந்த  2008-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகளிடம் துப்பாக்கிச் சண்டையிட்ட அதிரடிப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே பலியானார். ஹேமந்த் கர்கரே சிறையில் தன்னை டார்ச்சர் செய்ததால் சாபம் இட்டேன். அதனால்தான், மும்பையில் தீவிரவாதிகள் கையினால் அவர் இறந்தார்'' என்று கூறியும் பிரக்யா சர்ச்சையில் சிக்கினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க