`400 பணியாளர்கள்; சாலையைச் சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் தண்ணீர்!' - சர்ச்சையில் மோடியின் வாரணாசி பேரணி | 1.4 lakhs liters of water used to clean varanasi roads ahead of Modi rally: Reports

வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (26/04/2019)

கடைசி தொடர்பு:18:22 (26/04/2019)

`400 பணியாளர்கள்; சாலையைச் சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் தண்ணீர்!' - சர்ச்சையில் மோடியின் வாரணாசி பேரணி

`400 பணியாளர்கள்; சாலையைச் சுத்தம் செய்ய 1.4 லட்சம் லிட்டர் தண்ணீர்!' - சர்ச்சையில் மோடியின் வாரணாசி பேரணி

மோடி வாரணாசி

இந்தியாவில் மொத்தம் 545 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அத்தனை தொகுதிகளுக்கும் ஏழு கட்டமாகத் தேர்தல் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டது. அதில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டு முடிந்துவிட்டது. ஓட்டளித்த, ஓட்டு அளிக்கப்போகும் மக்கள் அனைவரும் முடிவு என்னவாக இருக்கப்போகிறதென்று காத்திருக்கிறார்கள். அதிலும், அரசியல் ஆர்வமுள்ள அனைவரும் கவனித்துக்கொண்டிருக்கும் ஒரு தொகுதி உத்தரப்பிரதேசத்திலுள்ள வாரணாசி. காரணம், இந்தியப் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதி அது.

அடுத்த மாதம் 19-ம் தேதி அங்கே தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனுவை மோடி இன்று தாக்கல் செய்திருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டியது என்னவெனில், இந்த வேட்புமனுவை ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தபடி மோடி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

மோடி

 

அதற்காக வாரணாசி நகரமே சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. வாரணாசி மாநகராட்சி 40 டேங்கில் நீரும், 400 பணியாளர்களையும் இதற்காகக் கொடுத்திருக்கிறது. அவர்கள் இரவுப் பணியில் அமர்த்தப்பட்டு சாலைகளைச் சுத்தம் செய்திருக்கிறார்கள். இதற்கு ஆன குடிநீர் செலவு மட்டும் 1.4 லட்சம் லிட்டர். வாரணாசியில் இதனால் 30 சதவிகித மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருவதாகத் தெரிகிறது. மோடி ஆட்சியில் உட்கார்ந்த தினத்திலிருந்து அவருடைய ஐந்தாண்டு ஆட்சி முடியும்வரை அவரைப் பற்றிய செய்திகளால் சுவராஸ்யம் குன்றாமல் நம்மைப் பார்த்துக்கொண்டார் எனச் சொன்னால் அது மிகையில்லை.