``முந்தைய சாதனைகளை முறியடித்து வாக்களியுங்கள்"- பிரதமர் மோடி | Break previous records in voting: PM Modi requested youths to rush their democratic rights

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (29/04/2019)

கடைசி தொடர்பு:13:15 (29/04/2019)

``முந்தைய சாதனைகளை முறியடித்து வாக்களியுங்கள்"- பிரதமர் மோடி

``நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை முடிந்த மூன்று கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகளைவிடவும் அதிகளவில் வாக்களித்து, முந்தைய சாதனைகளை முறியடிக்க வேண்டும்" என்று வாக்காளர்களைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மோடி

மக்களவைக்கு நான்காம்கட்டமாக 9 மாநிலங்களில் அடங்கிய 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மகாராஷ்டிராவில் 17, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் தலா 13, மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசம், ஒடிசாவில் தலா 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் பீகாரில் 5, ஜார்க்கண்டில் 3 மற்றும் ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தற்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், இளைஞர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ``நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மேலும் ஒருகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய தேர்தலில் ஏராளமானோர் வாக்களிப்பார்கள்; ஏற்கெனவே மூன்றுகட்ட தேர்தலில் பதிவான வாக்குகளைக் காட்டிலும், அதிகளவில் வாக்குகள் பதிவாகி, முந்தைய சாதனைகள் முறியடிக்கப்படும் என்று நம்புகிறேன்" என்று மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டரில், ``நீங்கள் அளிக்கும் ஓட்டு, ஜனநாயகத்தின் தூண்களை வலுவடையச் செய்வதுடன், புதிய இந்தியாவை வடிவமைக்க உதவிகரமாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க