`போகாதீங்க அப்பா!'- மனதைக் கரைய வைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீடியோ | police inspector post to be viral

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (29/04/2019)

கடைசி தொடர்பு:14:40 (29/04/2019)

`போகாதீங்க அப்பா!'- மனதைக் கரைய வைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீடியோ

ஒடிசா புவனேஸ்வரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றுபவர் காவல்துறை அதிகாரி அருண் போத்ரா. இவர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ பார்ப்பவரின் மனதைக் கரைய வைத்துக்கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில் பணிக்குச் செல்லும் தந்தையைப் பிரிய மனமில்லாமல் காலைப் பிடித்துக்கொண்டு அவருடைய மகன் அழும் காட்சி உள்ளது.

வைரல் வீடியோ

அருண் போத்ரா, இந்த வீடியோவை இணைத்து https://twitter.com/arunbothra/status/1122326391620427777 அதனுடன்,

போலீஸ் வேலையின் கடினமான பகுதி இதுதான். கடமையின் காரணமாக நீண்ட நேரம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரிகள், வீட்டுக்குச் செல்லும்போது ஒவ்வொருவரும் கண்டிப்பாக இந்தத் தருணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனப் பதிவிட்டிருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க