`கிரேட் காளி... காவி உடையில் உங்களுக்கு இங்கே என்ன வேலை?''- கொதிப்பில் மம்தா கட்சி | mamdha party Moves Poll Body Over 'The Great Khali' Campaigning For BJP

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (29/04/2019)

கடைசி தொடர்பு:13:42 (29/04/2019)

`கிரேட் காளி... காவி உடையில் உங்களுக்கு இங்கே என்ன வேலை?''- கொதிப்பில் மம்தா கட்சி

பிரமாண்ட உடலைக் காவி வர்ண உடை அணைத்துக்கொண்டிருக்க, பெரிய முகத்தில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு மேற்கு வங்கத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபடுவதைப் பார்த்த மம்தாவுக்கு கோபம் அதிகரித்தது.  `அமெரிக்க சிட்டிசனான அவருக்கு இங்கே என்ன வேலை? ' என்று மம்தா கொதிக்க,  திரிணாமுல் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளது. ரெஸ்லிங் களத்தில் எதிரிகளைப் பந்தாடும் கிரேட் காளிதான் மம்தாவுக்கு கோபத்தை ஏற்படுத்திய நபர். 

கிரேட் காளி

மேற்கு வங்கத்தில் ஜவால்பூர் மக்களவைத் தொகுதியில் அனுபம் ஹராரே என்பவர் போட்டியிடுகிறார். இவர், ரெஸ்லிங் சிங்கத்துக்குச் சகோதரர் முறை. இவருக்கு ஆதரவு திரட்டத்தான் அமெரிக்காவிலிருந்து வந்து காளி ஜவால்பூர் தொகுதியில் தெருத் தெருவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். செல்லுமிடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. திரிணாமுல் கட்சிக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்த உடனடியாக, இவரை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்கிறார் மம்தா. இது குறித்து  தேர்தல் ஆணையத்திடத்தில் திரிணாமுல் புகார் அளித்துள்ளது. 

புகாரில் ``கிரேட் காளி அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் பிரசாரம் செய்யலாமா. மேலும், இவர் ஒரு செலிபிரட்டி. அவரின், பிரபலத்தைப் பாரதிய ஜனதா கட்சி தவறாகப் பயன்படுத்துகிறது. எனவே, காளியை இந்தியாவிலிருந்து அனுப்ப வேண்டும்''  என்று திரிணாமுல் தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் முகுல் ராய், `காளியிடம் இந்தியக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் (Overseas Citizenship of India) சான்றிதழ் உள்ளது. காளி இந்தியாவில் பிறந்தவர். அனுபமுடன் சேர்ந்து அவர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை''  என்று மம்தாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். 

கிரேட் காளி

கிரேட் காளி கூறுகையில், ``பிரசாரம் செய்யவே அமெரிக்காவிலிருந்து வந்துள்ளேன். என் சகோதரர் நன்கு படித்தவர். உங்கள் பிரச்னைகளை அறிந்தவர். தவறானவர்களுக்கு வாக்கு அளித்து விடாதீர்கள்'' என்கிறார். முன்னதாக திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாக வங்கதேசத்தைச் சேர்ந்த நடிகர்கள் பெர்தோஸ், நுர் ஆகியோர் மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா கட்சி அளித்த புகாரின் பேரில் இருவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க