உறங்கவில்லை... அழுதாள்... எரிச்சலானேன் - வாயைப் பொத்தி 1 வயதுக் குழந்தையைக் கொன்ற தாய்! | Mother held for killing own baby in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (30/04/2019)

கடைசி தொடர்பு:14:04 (30/04/2019)

உறங்கவில்லை... அழுதாள்... எரிச்சலானேன் - வாயைப் பொத்தி 1 வயதுக் குழந்தையைக் கொன்ற தாய்!

15 மாதக் குழந்தையை அவரின் தாயே கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள பகுதி பட்டனாகாட்டைச் சேர்ந்தவர் ஆதிரா. 24 வயதாகும் இவருக்கு ஷாரோன் என்பவருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் 15 மாதங்களுக்கு முன்பு பிறந்தாள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 15 மாதக் குழந்தை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளது. நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை எழுப்பியுள்ளார் ஆதிரா. ஆனால், குழந்தை எழுந்திருக்கவில்லை என்பதால் மாமனாருடன் சேர்ந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு பக்கத்தில் உள்ள வீட்டினரிடம் காண்பித்துள்ளனர். அவர்கள் குழந்தை மயக்கமடைந்துள்ளதாகக் கூற அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். 

ஆதிரா

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது எனக் கூறியுள்ளனர். ஆனால், குழந்தை குறித்து ஆதிரா தெரிவித்த தகவல் சந்தேகத்தை ஏற்படுத்த மருத்துவர்கள் போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனர். விவகாரம் போலீஸுக்குச் செல்லவே குழந்தையின் உடல் பிரேதே பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். போதாக்குறைக்கு ஆதிராவின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில், `குழந்தையை அவரின் தாய் எப்போதும் அடித்துக்கொண்டே இருப்பார்’ எனக் கூறவே சந்தேகம் வலுத்தது. அப்போதுதான் உண்மை வெளிவரத் தொடங்கியுள்ளது. குழந்தையின் தாய் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். 

ஆதிரா

அதில் ஆதிரா தன் குழந்தையைக் கொன்றது நிரூபணமாகியது. குழந்தையைக் கொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என விசாரிக்கையில், ``குழந்தையை உறங்க வைத்தபோது உறங்க மறுத்ததால் அடித்து உறங்க வைத்ததாகவும், அப்போது குழந்தை அழுதுகொண்டே இருந்தது எரிச்சலாக இருந்ததால் கொன்றேன். அழுதுகொண்டே இருந்ததால் கையால் வாய் மற்றும் மூக்கைப் பொத்தி குழந்தையைக் கொன்றதாக" அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ``ஆதிராவுக்கும் அவரின் மாமியாருக்கும் அடிக்கடி சண்டைகள் நடந்துவந்துள்ளன. மாமியாரைக் கண்டாலே ஆதிராவுக்கு ஆகாது. அதனால் அவர் மீதான வெறுப்பில் குழந்தையைக் கொன்றுள்ளாரா என்கிற ரீதியிலும் விசாரணை செய்து வருகிறோம்" எனப் போலீஸார் கூறியுள்ளனர். சில நாள்களுக்கு முன்புதான், இடுக்கியில் பெட்ரூமில் மூன்றரை வயது சிறுவன் சிறுநீர் கழித்ததற்காக அவரின் அண்ணனைத் தந்தை கொலை செய்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது ஒன்றரை வயதுகூட ஆகாத குழந்தையை அவரின் தாயே கொலை செய்தது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க