`102 கிலோ எடை இருந்தேன்; என்னை இருள் சூழ்ந்ததுபோல் இருந்தது!' - வெயிட் லாஸ் சீக்ரெட் சொல்லும் சமீரா ரெட்டி | sameera reveals her weight loss secret

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (30/04/2019)

கடைசி தொடர்பு:20:02 (30/04/2019)

`102 கிலோ எடை இருந்தேன்; என்னை இருள் சூழ்ந்ததுபோல் இருந்தது!' - வெயிட் லாஸ் சீக்ரெட் சொல்லும் சமீரா ரெட்டி

வாரணம் ஆயிரம் படத்தின் `நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' பாடலில் தன்னுடைய முகபாவனையால் எல்லோரையும் அசரடித்தவர், சமீரா ரெட்டி. மாதவன், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், 2014-ம் ஆண்டு, தொழிலதிபர் ஒருவரை மணந்துகொண்டு  திரைத் துறையிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், 102  கிலோ எடையில் இருந்து 2 வருட போராட்டத்திற்குப் பின் மீண்டும் தன்னுடைய பழைய உடல் எடைக்கு வந்துள்ளதாகத் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீரா ரெட்டி

``திருமணமாகி நான் கருவுற்றபோது, என்னுடைய உடல் எடை அதிகரிக்கத்தொடங்கியது.என் குழந்தை பிறந்த சமயத்தில், நான் 102 கிலோ உடல் எடையில் இருந்தேன்.என்னுடைய உடல் எடை பற்றி வெளியே சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. உடல் எடை அதிகரித்தபோது, உண்மையில் என் தன்னம்பிக்கையை இழந்துவிட்டேன். குழந்தை பிறந்த ஓராண்டுக்குப் பின்னரும்கூட என்னால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை.

சமீரா

என்னை இருள் சூழ்ந்ததுபோல இருந்தது. வெளியிடங்களுக்குச் செல்லத் தயக்கமாக இருந்தது. ஒருகட்டத்தில், எனக்கு நானே ஊக்கம் கொடுத்துக்கொண்டு உடல் எடை குறைப்பில் முழுக் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். டயட் எதுவும் பின்பற்றவில்லை. ஆனால், உடற்பயிற்சி, யோகா என உடல் சார்ந்த பயிற்சிகள் மூலம் தற்போது என்னுடைய உடல் எடையைக் குறைத்துள்ளேன். நான் இந்தப் பதிவை பெண்களுக்காகப் பதிவிடுகிறேன். மகப்பேறு காலத்தில் ஹார்மோன் மாற்றம், மனநிலை மாற்றம் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறோம். நம் மனநிலை மாற நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். துணிச்சலாக இருங்கள்'' எனப் பதிவிட்டு, பெண்களை ஊக்கப்படுத்தியுள்ளார். இப்போது, சமீரா மீண்டும் கருவுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.