மகாராஷ்ட்ராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்! - 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழப்பு | 16 security personnel killed as Naxals trigger IED blast in Maharashtra's Gadchiroli

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (01/05/2019)

கடைசி தொடர்பு:16:25 (01/05/2019)

மகாராஷ்ட்ராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்! - 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழப்பு

மகாராஷ்ட்ராவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 15 கமாண்டோ படைவீரர்கள் உயிரிழந்தனர்.

மாவோயிஸ்ட் தாக்குதல்

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. மாநில அரசும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கட்சிரோலி பகுதியில் இன்று கமாண்டோ படை வீரர்களின் வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் பயணம் செய்த வாகனம் வெடித்துச் சிதறியது. வாகனத்தில் பயணம் செய்த 15 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட அனைவரும் கொல்லப்பட்டதாக அம்மாநில அமைச்சர் சுதிர் முகந்திவர் (Sudhir Mungantiwar) தெரிவித்துள்ளார். இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மகாராஷ்ட்ராவில் கடந்த மாதம் 11-ந் தேதி மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்த போது கட்சிரோலி பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இன்று நடத்தப்பட்ட தாக்குதலின் போது 200க்கும் அதிமகான மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலை 3 மணியளவில் கட்சிரோலி பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் 27 இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைத்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் சோதனை நடத்த கமாண்டோ வீரர்கள் வந்தபோது, அவர்கள் பயணித்த வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.