`ஷார்ட் டிரெஸ்; பாலியல் வன்கொடுமை!' - ரெஸ்டாரென்டில் இளம் பெண்களைச் சீண்டிய பெண்மணியால் சலசலப்பு | Woman Called Out In Gurgaon Mall Over

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (01/05/2019)

கடைசி தொடர்பு:16:50 (01/05/2019)

`ஷார்ட் டிரெஸ்; பாலியல் வன்கொடுமை!' - ரெஸ்டாரென்டில் இளம் பெண்களைச் சீண்டிய பெண்மணியால் சலசலப்பு

டெல்லியில் நடுத்தர வயதுப் பெண் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சுற்றியிருந்த பெண்கள் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். `இல்லாவிட்டால் அசிங்கப்படுத்திவிடுவேன்’ என அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் இடையே நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடுத்தரவயது பெண்

டெல்லியில் உள்ள குர்கான் மாலில் இளம் வயதுப் பெண்கள் அங்கிருந்த ரெஸ்டாரன்ட்க்கு வந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒரு பெண் ஷார்ட் டிரெஸ் அணிந்திருந்தார். அவரை கண்ட நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் அந்தப் பெண்ணைப் பார்த்து கூறிய வார்த்தைகள் அவர்களை கடுப்பேற்றியுள்ளது. அந்த நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த ரெஸ்டாரன்டில் இருந்த 7 ஆண்களை அழைத்து, இந்தப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுங்கள் என்று அநாகரிகமாகப் பேசியதாகத் தெரிகிறது. இதைக் கேட்ட அந்த இளம்பெண்கள், `நீங்கள் கூறிய கருத்துக்கு இப்போதே மன்னிப்பு கேளுங்கள். இல்லாவிட்டால் உங்களை அசிங்கப்படுத்திவிடுவேன். வீடியோ எடுத்து வைரலாக்கிவிடுவேன்'' என்று கூறியிருக்கின்றனர்.

இளம்வயது பெண்கள்

அவர் சொல்லியது போலவே வீடியோவும் எடுத்துள்ளார். வீடியோவில் தொடர்ந்து பேசும் அந்த இளம்பெண், ``இந்தச் சம்பவம் தொடர்பாக நீங்கள் பேசியது இந்த ரெஸ்டாரன்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காவல்நிலையத்தில் புகார் அளிப்போம்’ என்றும் பேசுகிறார்கள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. `எந்தவிதமான ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளுடைய விருப்பம், நீங்கள் சொல்லத்தேவையில்லை’ என்றும் அந்தப் பெண்கள் பேசுகின்றனர். நடுத்தரவயதுப் பெண்ணைச் சுற்றியிருக்கும் அவர்கள், `இப்போதே மன்னிப்புக்கேளுங்கள்’ என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். `முடியாது’ என அந்தப் பெண் முதலில் மறுக்க, பின், ``ஹலோ ஆண்களே, இந்தப் பெண்கள் ஷார்ட் டிரெஸ்களை உடுத்துவார்களாம். அவர்களை உற்சாகப்படுத்துங்கள். வெரி குட். எல்லாப் பெண்களும் ஷார்ட் டிரெஸ்களை உடுத்தினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவீர்கள். நீங்கள் அவர்களுடைய பெற்றோர்களாக இருந்தால் அந்தப் பெண்களைக் கட்டுப்படுத்துங்கள்” என்று கூறுகிறார்.

பெண்

`அவள் ஒரு சைக்கோ’ என்று அந்தப் பெண்கள் தொடர்ந்து வீடியோ எடுக்கின்றனர். இதுதொடர்பாக அந்த நான்கு இளம்பெண்களில் ஒருவரான ஷிவானி குப்தா தனது ஃபேஸ்புக்கில் அந்த வீடியோவைப் பதிவிட்டு,``ஷார்ட் டிரெஸ் உடுத்தியதால் இன்று நானும் எனது நண்பர்களும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் பெண் ஒருவரால் தொந்தரவுக்கு ஆளானோம். இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும் அந்த நடுத்தவர வயதுப் பெண்மணி, ஷார்ட் டிரெஸ் அணிந்ததால், அங்கிருக்கும் 7 ஆண்களை அழைத்து பாலியல் தொல்லை கொடுங்கள் என அவர் கூறுகிறார். பிற்போக்குத்தனமான கருத்துகளை உதிர்கிறார். அந்த இடத்தில் இருந்தவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். எங்களிடம் மன்னிப்பு கேட்குமாறு அந்தப் பெண்மணியிடம் வலியுறுத்தினோம். மற்ற பெண்களும் இதைப் பார்த்து பாடம் கற்றிருப்பார். அந்தப் பெண், பின்னர் மன்னிப்பு கோரினார்” இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.