குருநாத், விண்டூவுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு! | IPL betting suspects Vindoo, Meiyappan to stay in jail till June 14

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (03/06/2013)

கடைசி தொடர்பு:11:51 (03/06/2013)

குருநாத், விண்டூவுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டூ தாரா சிங்கின் நீதிமன்ற  காவல், வருகிற14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் குருநாத் மெய்யப்பனும், ஹிந்தி நடிகர் விண்டூ தாரா சிங்கும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில் இருவருக்கும் விதிக்கப்பட்ட போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, இருவரும் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் ஜூன் 14ம் தேதி வரை நீதிமன்ற  காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்