`இந்தியாவை ஆண்ட எந்த அரசும் இப்படி ஓட்டு கேட்கவில்லை!'- மோடியை விமர்சிக்கும் மன்மோகன் சிங் | "We do not hide behind the army like Modi!" - Manmohan Singh

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (03/05/2019)

கடைசி தொடர்பு:12:10 (03/05/2019)

`இந்தியாவை ஆண்ட எந்த அரசும் இப்படி ஓட்டு கேட்கவில்லை!'- மோடியை விமர்சிக்கும் மன்மோகன் சிங்

``மோடி போல் தேர்தலுக்காக இந்திய ராணுவத்தின் பின்னால் நாங்கள் ஒளிந்துகொள்ளவில்லை'' என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்

``பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பால்கோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது, நம் விமானப்படையினர் துல்லியத் தாக்குதல்களை நடத்தியதை, ஓட்டுக்காக மோடி பயன்படுத்திவருவது வெட்கக்கேடு. இதுபோல, எத்தனையோ துல்லியத் தாக்குதல்களை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிகழ்த்தியுள்ளது. ஆனால், அதுகுறித்து, ஒருபோதும் விளம்பரப்படுத்தியதில்லை; ஓட்டுக்காகப் பயன்படுத்தியதும் இல்லை'' என்று ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் மன்மோகன் சிங்.

மோடி

மேலும் அவர் பேசுகையில், ``கடந்த எழுபது ஆண்டுக் காலங்களில் இந்தியாவை ஆண்ட எந்த அரசும், நம் ராணுவத்தின் வீரத்தில் ஒளிந்து கொண்டு ஓட்டு கேட்கவில்லை. ஆனால், அதை மோடி செய்து வருகிறார். இது, நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வறுமை ஆகியவற்றில் இந்த அரசு சந்தித்த, மன்னிக்க முடியாத தோல்விகளை திசை திருப்பும் நடவடிக்கை'' என்று தெரிவித்துள்ளார்.