`மோடி வங்கிகளிடம் ஏமாந்துவிட்டார்!' - பாபா ராமதேவ் | Baba ramdev points out lakh crore scam in Banking sector due to demonitisation

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (03/05/2019)

கடைசி தொடர்பு:15:40 (03/05/2019)

`மோடி வங்கிகளிடம் ஏமாந்துவிட்டார்!' - பாபா ராமதேவ்

மோடி

2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சிக்கு தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்களில் யோகா குரு பாபா ராம் தேவ் ஒருவர். தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சியின் ஆதரவுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பதஞ்சலி வரிசை புராடக்ட்களை நிறுவினார். பதஞ்சலி நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்த நிலையில் பாபா ராமதேவ் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே பாரதிய ஜனதாவுக்குப் பாபா ராம் தேவுக்கும் இடையே மோதல் வலுத்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தவறானது என்று பாபா ராமதேவ் பேசியுள்ளார். ஆன்லைன் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்," ஊழலை ஒழிப்பதற்காகவும், கருப்புப் பணத்தை மீட்பதற்காகவும் சொல்லித்தான் பிரதமர் மோடி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அமல் படுத்தினார். ஆனால் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் 3-5 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. கருப்புப் பணத்தை மீட்டுத் தருவதாக கோரி ஊழல் வங்கியாளர்கள் சிலர் போட்டுக்கொடுத்த திட்டத்தால் மோடி ஏமாந்துவிட்டார். அவர் நல்ல எண்ணத்தில் செய்தாலும் வங்கிகள் அப்படி நடந்துகொள்ளவில்லை!" எனக் கூறியுள்ளார். பாபா ராம்தேவ் இப்படிக் கூறியிருப்பது வங்கித் துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க