`கத்துனா எதிராளி காலி!’ - சிறுமிக்குக் காவலாகும் கிளி #ViralVideo | Young Girl Trains Her Bird to Attack Anyone She Screams At

வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (03/05/2019)

கடைசி தொடர்பு:20:52 (03/05/2019)

`கத்துனா எதிராளி காலி!’ - சிறுமிக்குக் காவலாகும் கிளி #ViralVideo

சிறுமி ஒருவர் அபாயக்குரல் எழுப்பினால் போதும், உடனே வளர்க்கும் செல்லப்பிராணியான கிளி எதிராளியைத் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

கிளி

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட நாய்கள், தங்கள் முதலாளிகளை காவல்காக்கவே பயன்பட்டன. அவை தன்னுயிரைக் கொடுத்தாவது, தன்னை வளர்ப்பவரின் உயிரைக் காப்பாற்றும். அவ்வப்போது நிகழும் பல்வேறு சம்பவங்களே இதற்குச் சான்று. நாய்கள் மட்டுமல்ல, பொதுவாக நாம் வளர்க்கும் பிராணிகள், மனிதனோடு எதோ ஒருவகையில் எமோஷனல் டச் உடனே இருக்கின்றன. தன் எஜமானார் இயற்கை மரணம் எய்துவிட்டால், பிராணிகளின் வழக்கமான நடைமுறைகளில் மாற்றம் தெரிந்துவிடும். அதன் செயல்பாடுகள் அதை வெளிக்காட்டிவிடும்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று பிரேசிலில் திருட்டுக் கும்பல் ஒன்று கிளி ஒன்றுக்கு பயிற்சி அளித்திருந்தது. அதில் காவல்துறையினர் தங்களை பிடிக்கவந்தால், கிளி ஒலி எழுப்பி சிக்னல் கொடுக்கும் அதை வைத்து, அவர்கள் அங்கிருந்து தப்பித்து விடுவர். இப்படியும் செல்லபிராணிகளைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் ட்விட்டரில் லார்டு ஃப்ளாக்கோ என்பவர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். தன் சகோதரி மகள் வளர்க்கும் செல்லபிராணி குறித்து விளக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோவை இதுவரை 23.9 மில்லியன் பேர் கண்டுள்ளனர். அந்த வீடியோவில், அந்தச் சிறுமி கத்தும்போது, சிறுமிக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து, அவள் வளர்க்கும் கிளி எதிராளி மீது பாய்கிறது. அப்படியான பயிற்சி அந்தக் கிளிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ லிங் கீழே.