`எங்களைப் பற்றி எந்தக் கட்சியும் சிந்திக்கவில்லை!'- பாலியல் தொழிலாளர்கள் வேதனை | Nobody think about us, alleges sex workers

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (04/05/2019)

கடைசி தொடர்பு:16:40 (04/05/2019)

`எங்களைப் பற்றி எந்தக் கட்சியும் சிந்திக்கவில்லை!'- பாலியல் தொழிலாளர்கள் வேதனை

`எந்த அரசியல் கட்சியும் எங்களைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வருகிறார்கள் ' என  பாலியல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பாலியல் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியின்,  ஜி.பி.சாலையில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு, அதே பகுதியில் ஓட்டுரிமையும் உள்ளது. 'இந்தத் தேர்தலில் நாங்கள் வாக்களிக்க விரும்பவில்லை' என்று சிலர் தெரிவித்துள்ளனர்.  அரசியல் கட்சிகள்மீது  நம்பிக்கை இல்லை. இந்த நாட்டின் பிரஜை என்ற அடையாளத்தை வாக்குரிமை எங்களுக்குத் தருகிறது. அதனால் வாக்களித்தேன் என்று சிலர் கூறுகின்றனர்.

பாலியல் தொழிலாளர்கள்

''எங்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் சிந்திக்கவில்லை. பிறகு, நாங்கள் மட்டும் ஏன் அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டும். இங்கு வசிக்கும் பலரும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில், வாடிக்கையாளர்கள் எங்களிடம் செல்லாத 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தனர். எங்களுக்கு, எந்த வங்கியிலும் கணக்கு இல்லை. அதை மாற்ற முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். எங்களைப் பற்றி யாருமே நினைப்பதில்லை. இது எங்கள் தொழில்தான். ஆனால், எங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. அதற்கு, எந்த அரசியல் கட்சியும் எதையும் செய்யவில்லை'' என்கிறார் சாந்தினி.

இந்தியாவில், சுமார் இரண்டு மில்லியன் பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5,000 முதல் 7,000  சிறுமிகள் பாலியல் தொழிலுக்குக் கொண்டுவரப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.