2-வது முறையாக நின்றுபோனது பிரியங்கா சோப்ராவின் அண்ணன் திருமணம்! | priyanka Chopra's brother Siddharth wedding with ishita kumar has been called off

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (04/05/2019)

கடைசி தொடர்பு:17:20 (04/05/2019)

2-வது முறையாக நின்றுபோனது பிரியங்கா சோப்ராவின் அண்ணன் திருமணம்!

ப்ரல் மாத இறுதியில் நடைபெறுவதாக இருந்த நடிகை பிரியங்கா சோப்ராவின் அண்ணன் சித்தார்த் சோப்ரா - இஷிதா குமார் திருமணம், திடீரென நின்றுவிட்டது. இதை பிரியங்காவின் அம்மா மது சோப்ராவே உறுதிப்படுத்தியிருக்கிறார். சித்தார்த்தும் இஷிதாவும் சேர்ந்து எடுத்த முடிவு என்று கூறியுள்ள பிரியங்காவின் அம்மா, அதற்கான காரணத்தை மட்டும் வெளிப்படுத்தத் தயங்குகிறார். ஒரு திருமணம் நின்றுவிட்டால், என்னென்ன வதந்திகள் பரவுமோ அப்படியே பிரியங்காவின் அண்ணன் விஷயத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. 

பிரியங்கா சோப்ரா தன் குடும்பத்துடன்

PC:akm-img-a-in.tosshub.com

சில நாள்களுக்கு முன், மணமகள் இஷிதாவுக்கு அறுவைசிகிச்சையொன்று நடைபெற்றது. அது தொடர்பான படத்தை இஷிதாவே தன் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். இதன் காரணமாகத் திருமணம் தள்ளிப் போடப்பட்டிருக்கலாம் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்க, மணமகள் இஷிதாவோ, சித்தார்த்தை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்ததோடு, தங்கள் திருமணம் தொடர்பான அத்தனை படங்களையும் டெலிட் செய்திருக்கிறார். கூடவே தன்னுடைய இன்ஸ்டாகிராமில், கையில் ஜூஸ் தம்ளருடன் 'புதிய ஆரம்பத்துக்கு சியர்ஸ். அழகான முடிவுகளுக்கு குட் பை முத்தங்கள்' என்று பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவின் கீழே, இஷிதாவின் அம்மா நிதி குமார், 'பழைய புத்தகத்தை மூடிவிட்டு புதியக் கதையை எழுத ஆரம்பி' என்றும், அப்பா அனிருத் 'நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்' என்றும் தைரியப்படுத்தியிருக்கிறார். 

இஷிதா குமார்

பிரியங்கா சோப்ராவின் அண்ணன் சித்தார்த் சோப்ராவின் திருமணம் நின்றுபோவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே 2014-ல் சித்தார்த் கேர்ள் ஃப்ரெண்டுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம்... திருமணத்துக்கு முதல் நாள் நிச்சயிக்கப்பட்ட பெண்ணால் எந்தக் காரணமும் சொல்லப்படாமல் நிறுத்தப்பட்டது  குறிப்பிடத்தக்கது.