`பாடகி எஸ்.ஜானகிக்கு என்ன நடந்தது!'- மகன் முரளி கிருஷ்ணா விளக்கம் | singer s.janaki son murali krishna says, his mother current health conditions

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (06/05/2019)

கடைசி தொடர்பு:13:15 (06/05/2019)

`பாடகி எஸ்.ஜானகிக்கு என்ன நடந்தது!'- மகன் முரளி கிருஷ்ணா விளக்கம்

எஸ்.ஜானகி

பிரபல மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். ஜானகியின் உடல்நலம் அறிய அவரின் மகன் முரளி கிருஷ்ணாவிடம் பேசினோம்.

எஸ்.ஜானகி

``தனிப்பட்ட காரணங்களுக்காக அம்மாவும் நானும் மைசூருக்கு வந்திருக்கிறோம். இங்கு தங்கியிருந்த இடத்தில், வீட்டு காம்பவுண்டுக்குள் அம்மா வாக்கிங் போனாங்க. பிறகு வீட்டுக்குள் நுழைய வாசப்படியில் ஏறும்போது, கால் இடறி கீழே விழுந்துட்டாங்க. ஆனா, அம்மா குளியலறையில் தவறி விழுந்துட்டதாக தினசரி பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது உண்மையில்லை. உடனடியா அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆபரேஷன் நடந்துள்ள நிலையில், அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டுவந்துட்டோம். இப்போ, அம்மா குணமாகிட்டு வர்றாங்க. சீக்கிரமே எழுந்து நடக்கிற அளவுக்கு அவங்க இயல்புநிலைக்குத் திரும்பிடுவாங்க. வரும் நாள்களில் அம்மாவின் உடல்நிலையைப் பொறுத்து, ஹைதராபாத்திலுள்ள எங்க வீட்டுக்குத் திரும்புவோம். அம்மாவின் உடல்நிலைகுறித்து ரசிகர்கள் யாரும் பயப்படவேண்டியதில்லை" என்று முடித்தார், முரளி கிருஷ்ணா.