தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி - உச்ச நீதிமன்ற வாயிலில் 144 தடை உத்தரவு | Ranjan gogoi given clean chit: sec 144 imposed outside Supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (07/05/2019)

கடைசி தொடர்பு:13:20 (07/05/2019)

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி - உச்ச நீதிமன்ற வாயிலில் 144 தடை உத்தரவு

டெல்லி உச்ச நீதிமன்ற வாயிலில்  144 தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

ரஞ்சய் கொகாய் பாலியல் புகார்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரிடம் பணிபுரிந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். புகார் தொடர்பான அனைத்து சர்ச்சைகளில் இருந்தும் அவரை விடுவித்து, உச்ச நீதிமன்ற விசாரணைக் கமிட்டி அறிவித்துள்ளது. புகார் தெரிவித்த 14 நாள்களுக்குள் அவசர அவசரமாக இந்த விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் கொடுத்த பெண்ணுக்கு வாதாடவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. இப்படிப் பல சிக்கல் இந்தப் புகார் விசாரணையில் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தன. பாதிக்கப்பட்ட பெண்தான் மிகவும் மனவேதனையில் இருப்பதாகவும், கைவிடப்பட்டதுபோல உணர்வதாகவும் தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்ற வாயிலில் இன்று போராடுவதற்காக அனைத்து பெண்கள் அமைப்புகளும் குவிந்தன. நிலைமை கைமீறியதை அடுத்து, அங்கு குவிக்கப்பட்ட காவல் துறையினர், அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் காவல் துறை வண்டிக்குள் ஏற்றினார்கள். சிலர் வலிந்து ஏற்றப்பட்டார்கள். கைதுசெய்யப்பட்ட அனைவரும் புதுடெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கிடையே, உச்ச நீதிமன்ற வாசலில் அத்துமீறி கூட்டம் கூடக் கூடாது என்பதற்காக 144 தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க