`தேர்தல் விதிகளை மோடி மீறவில்லை!' - தேர்தல் ஆணையம் | EC clean chit to PM Modi in two more cases...

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (07/05/2019)

கடைசி தொடர்பு:15:50 (07/05/2019)

`தேர்தல் விதிகளை மோடி மீறவில்லை!' - தேர்தல் ஆணையம்

மோடி பிரதமர்

 17 - வது மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசித் தொகுதிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அஹமதாபாத்தில் ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பேரணியில் தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தப் புகாரின் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் `இதில் மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை' என்று கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம்

அதேபோன்று கர்நாடக மாநிலம் சித்ர துர்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி. ``பயங்கரவாதிகளுக்கு எதிராக பால்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்' என்று பேசினார். இதைத்தொடர்ந்து இதே கருத்தை மஹராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் பேசியபோதும் பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக எழுந்த புகாருக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது. இதிலும் `மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை' என்று கூறியுள்ளது. ஆனால், மத்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள ஒரு சில ஆணையர்கள் இதற்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்  வெளியாகி உள்ளது. அவர் மீதிருந்த 8 புகாருக்கு அவர்கள் குற்றமற்றவர் என்று தேர்தல் ஆணையம் கிளீன் சீட்  கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.