`சிறையில் வேலை செய்கிறேன், பணி கொடுங்கள்!'- காப்பாளரானார் சுதாகரன் | Sudhakaran works in library

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (08/05/2019)

கடைசி தொடர்பு:13:45 (08/05/2019)

`சிறையில் வேலை செய்கிறேன், பணி கொடுங்கள்!'- காப்பாளரானார் சுதாகரன்

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதுவரை அபராத தொகை 10 கோடி ரூபாய் இவரைச் செலுத்தாத காரணத்தால் கூடுதலாக ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது. 

சுதாகரன்

இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை விதிமுறைகளைக் காரணமாகக் கொண்டு முன் கூட்டியே விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால், சசிகலா, இளவரசி சிறையில் உள்ள தோட்ட பராமரிப்பு, காளான் வளர்ப்பு மற்றும் மகளிர் அழகு சாதனங்கள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு சிறை நன்னடத்தை விதிகளைப் பின்பற்றும் கைதிகளாகக் கருதப்பட்டு வருகின்றனர். இதனால் சசிகலாவும், இளவரசியும் தங்களின் சிறைத்தண்டனை காலத்திற்கு முன்பாகவே சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் சுதாகரன் மட்டும் சிறையில் எந்தவிதமான பணியும் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் சிறைத் தண்டனை காலத்திற்கு முன்பாக சிறையிலிருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தகவலை வழக்கறிஞர் அசோகன், சுதாகரனுக்குத் தெரிவிக்கவே, பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளர் சோமசேகரிடம் பேசிய சுதாகரன், சிறையில் பணியாற்ற சுதாகரன் வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதன்படி சிறையில் உள்ள நூலகத்தில் காப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பைச் சுதாகரனுக்குச் சிறைக் கண்காணிப்பாளர் கொடுத்துள்ளார். சிறையிலிருந்து சீக்கிரம் வெளியே வர சசிகலா தரப்பு கவனம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.