`பணம் கொடுத்தால் மறைத்துவிடுகிறேன்!'- போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை நடுவீதியில் பதறவைத்த பெண் | jamshedpur woman thrashes man with slipper

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (08/05/2019)

கடைசி தொடர்பு:15:30 (08/05/2019)

`பணம் கொடுத்தால் மறைத்துவிடுகிறேன்!'- போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை நடுவீதியில் பதறவைத்த பெண்

பெண் ஒருவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று கூறி, பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றவரை, அந்தப் பெண் சரமாரியாக அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

ராக்கி வர்மா

ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் ராக்கி வர்மா. இவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து ஒருவர் நுழைந்துள்ளார். அவர் அந்தப் பெண்ணிடம், `உங்கள் கணவர் ராக்கி வர்மா, லஞ்சப்பணத்தைப் பெற்றுள்ளார். இது பெரும் குற்றம். 50,000 ரூபாய் கொடுத்தால் இதை மறைத்துவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார். போலி அதிகாரி என கணித்துக்கொண்ட அந்தப் பெண், அருகிலிருக்கும் தன் தோழிகளுடன் ஆலோசித்து உறுதிபடுத்திக்கொண்டார். இதையடுத்து, தன் கணவருக்கு தகவல் தெரிவித்த அந்தப் பெண், தோழிகளுடன் இணைந்து, போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியைத் தாக்கத் தொடங்கினார்.

காவல்துறை

அவரை ரோட்டுக்கு இழுத்து வந்து, கடுமையாக தாக்கினார். உடனிருந்த அவர் கணவரும், புரட்டி எடுத்தார். தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வந்து, போலி அதிகாரியைக் கைது செய்தனர். முன்னதாக இத்தனை அடியையும் வாங்கிய அவர், அசால்ட்டாக வண்டியில் ஏறுகிறார். இது தொடர்பாக நடந்த விசாரணையில் ராக்கி வர்மாவின் உறவினர் ஒருவரே, அவரிடம் பணத்தைப் பறிக்க இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், அதிகாரி போல் நடித்தவரை, செருப்பால் அடிக்கிறார் அந்தப் பெண். இதைப் பலரும் ஷேர் செய்துவருகின்றனர்.