ஐ.என்.எஸ் விராட் கப்பலில் ராஜீவ் ஜாலி டூர் சென்றாரா... மோடி குற்றச்சாட்டு உண்மையா? | Rajiv Gandhi took INS Viraat for family vacation- PM modi

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (09/05/2019)

கடைசி தொடர்பு:10:49 (09/05/2019)

ஐ.என்.எஸ் விராட் கப்பலில் ராஜீவ் ஜாலி டூர் சென்றாரா... மோடி குற்றச்சாட்டு உண்மையா?

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, ராஜீவ் காந்தி மீது பகிரங்க குற்றச்சாட்டைச் சுமத்தினார் மோடி. கடந்த 1987-ம் ஆண்டில், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விராட் கப்பலில் சுற்றுலா சென்றார். உடன் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் இருந்தனர். கப்பலைக் கடலில் நிறுத்தி விட்டு கடற்படை ஹெலிகாப்டரில் லட்சத் தீவுக்குச் சென்று 10 நாள்கள் கழித்தனர். கடற்படை கப்பலை சுற்றுலா செல்ல பயன்படுத்திய சம்பவம் எங்காவது நிகழ்ந்தது உண்டா? ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா வழியிலான இத்தாலி உறவினர்களும் ஐ.என்.எஸ் விராட்டில் பயணம் செய்தனர். வெளிநாட்டினர் நம் நாட்டு போர்க்கப்பலில் பயணிப்பது நாட்டு பாதுகாப்புக்கு உகந்ததா, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இதுவெல்லாம் நடந்துள்ளது' என்று பேசினார்.

சோனியா ராஜீவ் காந்தி

மோடியின் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. லட்சத்தீவு அருகே பங்கராம் என்ற அழகிய தீவு உள்ளது. கொச்சியிலிருந்து 465 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் தீவு இருக்கிறது. இங்கேதான் ராஜீவ் காந்தியும் அவரின் நண்பர்கள் சிலரும் சென்றுள்ளனர். அதில் , வெளிநாட்டினரும் இருந்துள்ளனர். தீவுக்குச் செல்வதற்கு ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை ராஜீவ் காந்தி பயன்படுத்தியுள்ளார். அப்போது இந்தியாவிடம் இருந்த ஒரே விமானம் தாங்கிக் கப்பல் இது. விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று கடலில் பயணிப்பது என்பது அதிக செலவு பிடிக்கும் விஷயம். இதற்கு, பாதுகாப்புக்குக் குட்டி போர்க்கப்பல்கள் உடன்  செல்லும் பாதுகாப்புக்கு நீர்மூழ்கிக் கப்பலும் செல்லும். ராஜீவ் காந்தி லட்சத்தீவுக்கு விராட் கப்பலைப் பயன்படுத்திய போது, விராட் தன் பாதுகாப்பு கப்பல்களுடன்தான் அங்கே சென்றுள்ளது. 

ஐ.என்.எஸ்

ராஜீவ் காந்தி விராட் போர்க்கப்பலை தன் சொந்தப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தியது வெளியே தெரிந்து சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து, செலவுத் தொகையை ராஜீவ் காந்தியே செலுத்த வேண்டுமென்று சொல்லப்பட்டதாக தெரிகிறது. 1987-ம் ஆண்டுதான் ஐ.என்.எஸ் விராட் கடற்படையில் இணைக்கப்பட்டது. 30 ஆண்டுகள் சேவை செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க