`ராகுல் சொன்னதைச் செய்துவிட்டார்களா?’ - மக்களின் பதிலால் அப்செட்டான ஸ்மிருதி இரானி | Smriti Irani Embarrassed By Crowd, Claims Congress

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (09/05/2019)

கடைசி தொடர்பு:13:15 (09/05/2019)

`ராகுல் சொன்னதைச் செய்துவிட்டார்களா?’ - மக்களின் பதிலால் அப்செட்டான ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இராணி

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தேசியக் கட்சிகள் பரப்பாக இயங்கிவருகின்றன. அமேதி  தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து  ஸ்மிருதி இரானி களம் காண்கிறார். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாகச் சாடினார் ஸ்ம்ரிதி இரானி.  அப்போது, ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தபடி கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்துவிட்டதா” என்று கேள்வி எழுப்பினார்.  அப்போது அங்கு கூடியிருந்த மக்கள்  '‘ஆம்'’ என்று பதிலளித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்மிருதி இரானி, மற்ற பிரச்னைகள் குறித்து பேசத் தொடங்கினார். ஆனால், இந்த வீடியோ எப்படியோ மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியினரின் கைகளில் சிக்க,  அதைத் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்தனர். பா.ஜ.க-வின் பொய்களை மக்கள் உணரத்தொடங்கிவிட்டனர் என்ற ஹேஷ்டேக் லைனுடன் பதிவிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான்,  சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதிகளை அளித்ததுதான் அந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதன்காரணமாகதான், மத்தியப்பிரசேத தேர்தல் பிரசாரத்தில் ஸ்மிருதி ரானி பேசினார். ஆனால், அங்கு கூடியிருந்த மக்கள் அளித்த பதில் அவரை அதிருப்தியடைய வைத்தது.  ஸ்மிருதி இரானி 2014 மக்களவைத் தேர்தலில் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டு, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.