`நீங்கள் என்னை அடித்தால், அது எனக்கு ஆசீர்வாதம்!' - மம்தாவுக்கு மோடி பதில்  | "Your Slap Will Be A Blessing," PM Retorts After Mamata Banerjee's Attack

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (09/05/2019)

கடைசி தொடர்பு:17:20 (09/05/2019)

`நீங்கள் என்னை அடித்தால், அது எனக்கு ஆசீர்வாதம்!' - மம்தாவுக்கு மோடி பதில் 

மம்தா - மோடி

நாடாளுமன்றத் தேர்தல் வரும்19-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் மோடிக்கும் வார்த்தை மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மோடியை ஜனநாயகம் மூலம் அடிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி பேசியுள்ளார். அவருடைய இந்தப் பேச்சுக்கு மோடி பதில் கருத்தை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய மோடி, `திதி (சகோதரி) என்னை அடிப்பதாகக் கூறியுள்ளார். அவரை மிகுந்த மரியாதையோடு அழைக்கிறேன். நீங்கள் என்னை அடிப்பது ஆசீர்வதிப்பதற்குச் சமமாகும். எனவே வந்து தாராளமாக என்னை அடியுங்கள்'' என்று கூறியுள்ளார். 

மம்தா பானர்ஜி  மேற்கு வங்க முதலமைச்சர்

உங்களுடைய அந்த ஆசீர்வாத அடியை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட உங்களுடைய கட்சி பிரதிநிதிகளை உங்களால் அடிக்க முடியுமா. அப்படி அடிக்கக்கூடிய வலிமை உங்களுக்கு இருக்கிறதா. மேலும், கொள்ளைக்கார வரியை விதித்து மேற்கு வங்க மக்கள் துயரத்தில் தள்ளப்படுகிறார்களே, அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட்டிருக்கிறீர்களா'' என்று கடுமையாக மம்தா மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.