`பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி இல்லை!' - தீவிரவாத நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் உ.பி ஹோட்டல் | Entry of Pakistani nationals restricted, announces UP Hotel

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (10/05/2019)

கடைசி தொடர்பு:16:40 (10/05/2019)

`பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி இல்லை!' - தீவிரவாத நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் உ.பி ஹோட்டல்

ஹோட்டல் மிலன்

`பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி மறுப்பு'.... உத்தரப்பிரதேச மாநில பிரயாக்ராஜ்ஜில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தான் இப்படியான அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. ஹோட்டல் மிலன் பேலஸ் என்ற நட்சத்திர விடுதியில்தான் இப்படி எழுதியுள்ளனர். சர்தார் ஜோஹிந்தர் சிங் என்பவர் தான் இதன் உரிமையாளர். புல்வாமா தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட மறுநாளே இந்த ஹோட்டலில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போதுதான் இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதுகுறித்து பேசியுள்ள ஜோஹிந்தர் சிங், ``நான் முன்னாள் ராணுவ வீரரின் மகன். என் தந்தை சுஜன் சிங் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவர். அவர் 1961-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்மாவாவில் நடந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போதுதான் முடிவு செய்தேன் எனது ஊழியர்களிடமும் தெரிவித்தேன் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கக் கூடாது என்று. நம் நாட்டுக்கு எதிரானவர்களை எதிர்த்து போரிட என்னிடம் துப்பாக்கி இல்லை. ஆனால், இந்த நடவடிக்கையின் மூலம் என்னால் முடிந்ததைச் செய்கிறேன். எனக்குப் பாகிஸ்தானியர்களோடு எந்தப் பிரச்னையும் இல்லை. தேசம் தான் முக்கியம், பணம் எல்லாம் அதற்குப் பின்புதான்” என தெரிவித்துள்ளார்.

பிரயாக்ராஜ்ஜில் இவருக்குச் சொந்தமாக இரண்டு ஹோட்டல்கள் உள்ளன. இந்தியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவரும் இங்கு வந்து தங்குகின்றனர். இந்த நிலையில்தான் இவர் இப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.