`தனி விமானம்; உயர் ரக சிகிச்சை’ - உயிருக்குப் போராடிய சிறுமிக்கு உதவிய பிரியங்கா காந்தி! | Priyanka Gandhi Gets Private Jet, AIIMS Treatment For Girl With Tumor

வெளியிடப்பட்ட நேரம்: 09:38 (12/05/2019)

கடைசி தொடர்பு:09:38 (12/05/2019)

`தனி விமானம்; உயர் ரக சிகிச்சை’ - உயிருக்குப் போராடிய சிறுமிக்கு உதவிய பிரியங்கா காந்தி!

சிறுமி ஒருவரின் உயிரைக் காக்க பிரியங்கா காந்தியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனி விமானத்தை ஏற்பாடு செய்து அந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

தனிவிமானம்

மக்களவைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.அரசியல் கட்சித்தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி  உத்தரபிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளராகக் களமிறங்கியுள்ள பிரியங்கா காந்தி மிரட்டி வருகிறார். அண்மையில் வீடியோ ஒன்றும் வைரலானது. அந்த வீடியோவில், `சவுக்கிதார் திருடன்’ என்று மோடியை சாடும் வகையில் முழக்கங்கள் எழுப்பின. இதற்கு அவர், `இது நல்ல பழக்கம் அல்ல’ என்று கண்டித்தார்.

பிரியங்கா காந்தி

ஆனால் இந்த வீடியோக்களை பாதியில் எடிட் செய்து, மோடியை சிறுவர்கள் சாடுவதை பிரியங்கா ரசிக்கிறார் என்றெல்லாம் பரப்பப்பட்டது. தொடர்ந்து பிரசாரம் ஒன்றின் போது, பாம்பு ஒன்றைக் கையில் பிடித்து,`எனக்குப் பயமில்ல’ என்றார். இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் மனதில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் பிரியங்கா. அடுத்ததாகச் சிறுமி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள கமலா மருத்துவமனையில் சிறுமி ஒருவர் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

சிறுமியின் பெற்றோர் பிரியங்கா காந்தியை சந்தித்து, மருத்துவச் செலவுகளை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு தங்களின் பொருளாதார வசதியில்லை என்றும், தங்கள் மகளின் உயிரைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு உதவுவதாகத் தெரிவித்த பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜீவ் சுக்லா,  ஹர்திக் படேல், மற்றும் முஹம்மத் அசாருதின் ஆகியோரிடம் சிறுமி சிகிச்சைக்குத் தேவையான உதவிகள் செய்யுமாறு கூறியுள்ளார். மேலும் தனி விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி சிக்ஸ் சீட்டர் தனி விமானம் மூலம் சிறுமி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு உயர்ரக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.