மறுத்த இந்தியா; கைகொடுத்த ஜப்பான்! - உலகின் முதல் கண்டுபிடிப்பால் சாதித்த தமிழர் | Coimbatore based mechanical engineer invented an engine that can run on distilled water

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (12/05/2019)

கடைசி தொடர்பு:10:20 (12/05/2019)

மறுத்த இந்தியா; கைகொடுத்த ஜப்பான்! - உலகின் முதல் கண்டுபிடிப்பால் சாதித்த தமிழர்

 ‘இந்தியாவில் திறமை மிக்க பல மனிதர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இங்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இந்திய நிறுவனங்களும், அரசாங்கமும் வாய்ப்பு அளிக்க மறுக்கிறது. திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளித்தால் அவர்கள் இந்திய நாட்டை முன்னேற்றுவார்கள். இங்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் திறமையாவார்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டை முன்னேற்றிக்கொண்டிருக்கின்றனர்’ இந்த வசனத்தைப் பல தமிழ்ப் படங்களில் நாம் கேட்டிருப்போம். ஆனால் இந்த நிகழ்வு தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு உண்மையாகியுள்ளது. 

குமாரசாமியின் கண்டுப்பிடிப்பு

கோயம்புத்தூரைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியர் குமாரசாமி.  இவர் முழுவதுமாக தண்ணீரிலேயே இயங்கும் என்ஜின் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த என்ஜின் ஹைட்ரஜனை எரிப்போருளாகக் கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாத வகையில் இயங்குவதுதான் இதன் சிறப்பு அம்சம். 

இயந்திரம்

தன் என்ஜின் பற்றி பேசியுள்ள குமாரசாமி, “ இந்த இயந்திரத்தை கண்டுபிடிக்க எனக்குப் பத்து ஆண்டுகள் ஆனது. உலகிலேயே இந்த அம்சம் கொண்ட கண்டுபிடிப்பு இதுதான் முதல் முறை. இந்த என்ஜின் ஹைட்ரஜனை எரிபொருளாக்க எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும்.

குமாரசாமி

இதை முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதுதான் எனது பெரும் கனவு. அதற்காக இங்குள்ள பல நிறுவனங்களில் கதவுகளை தட்டினேன். ஆனால் யாரும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதன் பிறகு என் திட்டத்தை ஜப்பான் அரசின் பார்வைக்கு கொண்டு சென்றேன். அவர்கள் உடனடியாக எனக்கு வாய்ப்பு வழங்கினார்கள். விரைவில் இது ஜப்பானில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த அரிய இயந்திரத்தை கண்டுபிடித்த குமாரசாமிக்கு சமூகவலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

இவரின் கண்டுபிடிப்பு பற்றிய உங்களின் கருத்தை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.