"லட்சத்தில் திருமண ஆடை" - பாலிவுட் நடிகைகளை கண்முன்னே கொண்டுவந்த பெண்! | this bride recreated bollywood celebrity outfits aat her own wedding

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (13/05/2019)

கடைசி தொடர்பு:19:40 (13/05/2019)

"லட்சத்தில் திருமண ஆடை" - பாலிவுட் நடிகைகளை கண்முன்னே கொண்டுவந்த பெண்!

தன் புகைப்படத்தை சோனம்கபூரின் மெஹெந்தி புகைப்படத்துடன் இணைத்து, அனுஷா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

திருமண தினத்தன்று உறவுகள் சூழ்ந்திருக்க, தன்னை தனித்துவமாகக் காட்ட அனைத்துப் பெண்களுக்கும் ஆசை இருக்கும். சில பெண்கள் செலிப்ரிட்டிகளின் ட்ரெண்டைப் பின்பற்றுவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பர். அந்த வகையில் அனுஷாபட் என்ற பெண்,  பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், சோனம் கபூரின் திருமண ஆடைகளைப் போன்றே தன் திருமண ஆடைகளை வடிவமைத்து, அதைப் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார். லட்சக்கணக்கில் செலவிட்டு அவர் உருவாக்கிய ஆடைகள், இணையத்தில் பரவிவருகின்றன.

 

ஆடை

 

சோனம்கபூர், தன்னுடைய மெஹந்தி நிகழ்ச்சிக்கு ஐவரி நிறத்தில் ஷிகன்காரி லெஹெங்கா அணிந்து, அதற்கு மேட்சாக போல்கி சோக்கரை மிக்ஸ் மேட்ச் செய்திருந்தார். மேலும், தன்னுடைய வித்தியாசமான நியூ லுக்கிற்காக சோனம் செய்திருந்த  ஹேர்ஸ்டைலான மொகரா கிராஸ் கிராஸிங் பின்னல்களும் பெண்களிடையே  ட்ரெண்டு ஆனது. இதைப் பின்பற்றும் விதமாக, அனுஷாபட் தன்னுடைய மெஹந்தி நிகழ்வுக்கு ஐவரி நிறத்தில்  கோல்டன் ஸ்டோன்காளால் அலங்கரிக்கப்பட்ட ஆடையை வடிவமைத்து,  மொகரா கிராஸ் கிராஸிங் பின்னல் ஹேர் ஸ்டைல் செய்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை சோனம்கபூரின் மெஹந்தி புகைப்படத்துடன் இணைத்து, அனுஷா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஷன்

 

அனுஷாவின் திருமண ஆடைகள், சிவப்பு நிறத்தில் தங்க ஜரிகைகள் மற்றும் ஸ்டோன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேட்ச்சாக, அவர் அணிந்திருந்த சிவப்பு நிற துப்பட்டா, தீபிகா படுகோனின் திருமண ஆடையுடன் ஒத்திருந்தது. தீபிகா படுகோன் தன்னுடைய திருமண துப்பட்டாவில் "சதா செளபாக்கியவதி பவா" எனத் தங்க ஜரிகையால் எழுதி தனித்துவமாக வடிவமைத்திருந்தார். இவை அனுஷாவின் திருமண ஆடையில் இல்லையெனினும், அனுஷா அணிந்திருந்த அணிகள் தீபிகா படுகோனை நினைவுபடுத்துவதாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள். மேலும், தீபிகா தன்னுடைய ரிசப்ஷனுக்கு அணிந்திருந்த பால் கவுன் போன்றே அனுஷா தன் ரிஷப்ஷன் ஆடையையும் வடிவமைத்துள்ளார்.

நடிகை - திருமணம்

 

இதுகுறித்து அனுஷா வெளியிட்டுள்ள பதிவில், " எல்லா பெண்களுக்கும் செலிப்ரிட்டிகள் போன்று ஆடை அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். என்னுடைய ஆசையை என் திருமண உடைகள் மூலமாக நிறைவேற்றியுள்ளேன். ஒவ்வொரு செலிப்ரிட்டிகளின் திருமணத்தின்போதும் அவர்களின் ஆடைகளில் உள்ள தனித்துவங்களை எழுதிவைத்துக்கொள்வேன். அவற்றையெல்லாம் என் திருமண ஆடைகளில் காட்சிப்படுத்தியுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.