விதிமீறல்... இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் மீது மத்திய அரசு நடவடிக்கை! | Cancels registration of Infosys Foundation

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (13/05/2019)

கடைசி தொடர்பு:20:20 (13/05/2019)

விதிமீறல்... இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் மீது மத்திய அரசு நடவடிக்கை!

இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனின் ரிஜிஸ்ட்ரேஷனை ரத்துசெய்து, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அங்கமான இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு, வெளிநாட்டு நிதி தொடர்பான வரவு-செலவு கணக்கு தாக்கல்செய்யத் தவறியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ்

இந்த ஃபவுண்டேஷன் செய்துவரும் பல்வேறு சமூக நலப்பணிகளுக்காக, உலகம் முழுவதுமிருந்து நிதி உதவி கிடைத்துவருகிறது. ஆனால், இந்த நிதி தொடர்பான கணக்குவழக்குகளைக் கடந்த சில ஆண்டுகளாகவே முறையாகத் தாக்கல்செய்யவில்லை என்று அமைப்பின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது, எஃப்.சி.ஆர்.ஏ (வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம்) சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதால், அந்த ஃபவுண்டேஷன்மீது உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இன்ஃபோசிஸ்

எஃப்.சி.ஆர்.ஏ விதிமுறைப்படி, பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை, ஒவ்வொரு நிதியாண்டிலும் அந்த அறக்கட்டளைக்கு வரும் வெளிநாட்டு நிதி உதவிகள் தொடர்பான ரசீதுகள், வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமாக ஆண்டு அறிக்கையாக ஒப்படைக்க வேண்டும். அந்த அறக்கட்டளைக்கு எவ்வித வெளிநாட்டு நிதியுதவியும் வரவில்லை என்றாலும், அதனையும் குறிப்பிட வேண்டும். ஆனால், இவற்றில் எதையும் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் முறையாகச் செய்யவில்லை. இதன்காரணமாகவே அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.