அதிகரித்த கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை - எந்தக் கட்சியில் அதிகம்? | In 2019 general elections,criminal candidates

வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (14/05/2019)

கடைசி தொடர்பு:14:17 (14/05/2019)

அதிகரித்த கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை - எந்தக் கட்சியில் அதிகம்?

2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 7,928 வேட்பாளர்களில் 1,500 வேட்பாளர்களின்மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது, தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் (ADR) ஆகியவை நடத்திய சர்வே முடிவில் இது தெரிய வந்துள்ளது. இவர்களில் 1,070 வேட்பாளர்கள்மீது கற்பழிப்பு, கொலை, ஆள் கடத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த 2014 தேர்தலில் போட்டியிட்ட 8,205 வேட்பாளர்களில் 1,404 வேட்பாளர்களின்மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாஜக - காங்கிரஸ் கட்சிகள்

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 433 வேட்பாளர்களில் 175 பேர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 419 வேட்பாளர்களில் 164 வேட்பாளர்கள்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் 381 வேட்பாளர்களில் 85 பேர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 3,370 சுயேச்சை வேட்பாளர்களில் 400 பேர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் 7,928 வேட்பாளர்களில் 2,297 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.