தங்களின் மாதச் சம்பளத்தை வழங்கிய காவலர்கள் - சமையல்காரருக்காகத் தயாராகும் வீடு | kerala police built house for cook

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (14/05/2019)

கடைசி தொடர்பு:16:52 (14/05/2019)

தங்களின் மாதச் சம்பளத்தை வழங்கிய காவலர்கள் - சமையல்காரருக்காகத் தயாராகும் வீடு

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்தவர் ஜானகி அம்மாள். இவர் அதே பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் 12 வருடங்களாக வேலை செய்து வருகிறார். அவர் காவலர்களுக்கு தேவையான உணவு மற்றும் உதவிகளைச் செய்து வந்துள்ளார். ஜானகி அம்மாளுக்குச் சொந்தமாக வீடு இல்லாத காரணத்தினால் இரவில் காவல்நிலையத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

காவல்துறை

இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும் நினைத்த தலிபரம்பா எஸ்.பி சுதாகரன் மற்றும் காவலர்கள், ஜானகி அம்மாளுக்கு ஒரு சொந்த வீடு கட்ட முடிவு செய்தனர். அதற்காக அந்தக் காவல் நிலையத்தில் உள்ள அனைத்துக் காவலர்களும் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை ஜானகி அம்மாளின் வீட்டுக்காகக் கொடுத்துள்ளனர். மாதா மாதம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் சிறிய அளவை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர்.

ஜானகி அம்மாள் வீடு

இதற்கிடையில் எஸ்.பி சுதாகரன் வேறு காவல்நிலையத்துக்கு இடமாற்றமாகிச் சென்றுள்ளார். தலிபரம்பா காவல்நிலையத்துக்கு புதிய எஸ்.பியாக கிருஷ்ணன் என்பவர் வந்துள்ளார். அவரிடமும் ஜானகி அம்மாள் பற்றியும் அவருக்காகக் கட்டப்பட்டு வரும் வீடு குறித்தும் சக காவலர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்தச் செயலை ஏற்ற புதிய எஸ்.பி தன் சம்பளத்தின் சிறு பகுதியையும் ஜானகி அம்மாளுக்காக வழங்கியுள்ளார். தற்போது ஜானகி அம்மாளுக்காக கன்னூரில் மாடி வீடு ஒன்று தயாராகி வருகிறது. 

News Credits : mathrubhumi