`வளர்ச்சி என்ற பெயரில் அணிந்திருந்த கோட் கழற்றப்பட்டுவிட்டது!' - அருந்ததி ராய் | Arundhathi roy speaks to democracy now about the parliamentary elections and modi referendum

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (14/05/2019)

கடைசி தொடர்பு:20:30 (14/05/2019)

`வளர்ச்சி என்ற பெயரில் அணிந்திருந்த கோட் கழற்றப்பட்டுவிட்டது!' - அருந்ததி ராய்

``எழுத்தாளர்கள் என்பவர்கள் பாதுகாப்பான எல்லைகளுக்குள் நின்றுகொண்டு, தன்னுடைய நூல்களை நிறைய பிரதிகள் விற்பனை செய்யத் தெரிந்தவராக, எவரையும் தொந்தரவே செய்யாத எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அருந்ததி ராய்

செயற்பாட்டாளர்கள் என்பவர்கள் எழுத்தாளர்களல்லர், அவர்கள் ஒருவிதமான தனித்த வகையினர் என்னும் பொது மனநிலை இருக்கிறது. முத்திரை குத்துவதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?” - அவரது கட்டுரைகளின், புத்தகங்களின் மீதான முத்திரை குறித்து சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்திருந்த பேட்டியில் இப்படித் தெரிவித்திருந்தார் எழுத்தாளர் அருந்ததி ராய்.

நாடாளுமன்றத் தேர்தலில் இறுதிக்கட்ட வாகுப்பதிவு நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை, மத ரீதியான கொள்கைகளைத் தொடர்ச்சியாகக் கவனப்படுத்தி வருகிறார் அருந்ததி ராய். அமெரிக்காவின் `Democracy Now' இதழின் கேள்விக்குப் பதிலளித்திருக்கும் அருந்ததி ராய், ``முந்தைய தேர்தலில் வளர்ச்சி என்னும் விலங்குத் தோலால் ஆன கோட்டை அணிந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இந்த முறை வளர்ச்சியைப் பற்றி பேச முடியாது. அதனால், வளர்ச்சி என்ற கோட்டை கழற்றிவிட்டு, இந்து தேசியம், தேசப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். `நான் நாட்டு வளர்ச்சிக்கானவன். எல்லோருக்குமான, எல்லாவற்றிலுமான வளர்ச்சி’ என்னும் பிரசாரத்தை இனிமேல் அவரால் முன்னெடுக்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறார் அருந்ததி ராய்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க