`பாதுகாவலர்களுக்குத் தனி வாகனம் வேண்டும்!'- தர்ணாவில் ஈடுபட்ட மோடியின் சகோதரர் | PM's Brother Sits On Dharna in jaipur

வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (15/05/2019)

கடைசி தொடர்பு:10:19 (16/05/2019)

`பாதுகாவலர்களுக்குத் தனி வாகனம் வேண்டும்!'- தர்ணாவில் ஈடுபட்ட மோடியின் சகோதரர்

பாதுகாவலர்களுக்கு தனி வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டுமென்று கூறி, பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகலாத் மோடி

பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி நேற்று சொந்த வேலை காரணமாக அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அவரின் பாதுகாப்புக்கு இரு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாக்ரு காவல் நிலையத்தில் தயாராக இருந்தனர். பாதுகாப்புக்கு வரும் போலீஸாரை, தன் காரில் ஏற்றிக்கொள்ள மறுத்த பிரகலாத் மோடி, அவர்களுக்குத் தனி வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டுமென்று போலீஸ் அதிகாரிகளை நிர்பந்தித்தார். போலீஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கவே, கோபமடைந்த அவர் ஜெய்ப்பூர்- ஆஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாக்ரு போலீஸ் நிலையத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் பிரகலாத் மோடியின் தர்ணா நடந்தது. அதிகாரிகள் அவரைச் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, இரு பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரகலாத் மோடி புறப்பட்டுச் சென்றார். 

இந்தச் சம்பவம் குறித்து ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் ஆனந்த் ஸ்ரீவஸ்த்தவா கூறுகையில்,  ``பிரதமரின் சகோதரருக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டே இரு தனி பாதுகாப்பு அதிகாரிகள் ஒதுக்கப்பட்டனர். அவர்களுடன் ஒரே காரில் பயணிக்க அவர் மறுத்தார். விதிமுறைகளின்படி, பாதுகாப்பு அளிக்கப்பட்ட நபருடன்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்க வேண்டும். அதற்கான ஆர்டரை காட்டி அவரை நாங்கள் அனுப்பி வைத்தோம்''  என்று தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க