`தலை ஓரிடம், கை வேறிடம் வீசப்பட்டது!' - கர்நாடகாவை உலுக்கிய கொலைச் சம்பவம் | murder of mangaluru woman whose mutilated body parts were found

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (15/05/2019)

கடைசி தொடர்பு:19:16 (15/05/2019)

`தலை ஓரிடம், கை வேறிடம் வீசப்பட்டது!' - கர்நாடகாவை உலுக்கிய கொலைச் சம்பவம்

கர்நாடகாவில் பெண் ஒருவரின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு, பல்வேறு பகுதிகளில் தூக்கி ஏறிந்த வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பெண் ஸ்ரீமதி

கர்நாடகா மாநிலம் அட்டாவரில் மின்சாதன விற்பனை அங்காடி நடத்தி வருபவர் ஸ்ரீமதி ஷெட்டி. இவர் நந்தி குட்டேவில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்திவரும் சாம்சன் என்பவருக்கு 1 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இதைப் பெற்றுக்கொண்ட சாம்சன் 40,000 மட்டுமே வாங்கிய கடனில் திருப்பிச் செலுத்தியுள்ளார். ஃபாஸ்ட் ஃபுட் கடை சரிவர ஓடாத காரணத்தால், சாம்சனால் மீதி 60,000 ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதைக் காரணம் காட்டி வாங்கிய பணத்தை அவர் கொடுக்காமல் இருந்தார். இதனால் கடுப்பான ஸ்ரீமதி, கடந்த 11-ம் தேதி சாம்சன் வீட்டுக்குச் சென்று மீதி பணத்தைக் கேட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சாம்சன் ஸ்ரீமதியைக் கொலைசெய்துள்ளார்.

கொலை

 

இதையடுத்து அவரது உடலை 3 துண்டாக வெட்டி, கோணிப்பையில் திணித்துள்ளார். பின், நள்ளிரவில் யாரும் இல்லாத பகுதிகளில் தூக்கி வீசியுள்ளார். இது தொடர்பாக வழக்கை விசாரிக்க 30 போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. பழக்கடை அருகே பண்டுவா கல்லூரி ஜங்ஷனில் ஸ்ரீமதியின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது. அதேபோல பதுவா அருகே ஸ்ரீமதியின் கால்பகுதி கண்டறியபட்டது. ஸ்ரீமதி ஷெட்டியின் போன்கால்களை காவல்துறையினர் ட்ரேஸ் செய்தபோது, அவர் சாம்சனுக்கு 11-ம் தேதி கால் செய்தது உறுதியானது. மேலும், விசாரணையில் பணத்தகராறுதான் காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சாம்சன் மீது 2010-ல் கூட ஒரு கொலை வழக்கு தொடுக்கபட்டுள்ளது. இது தொடர்பாகக் காவல்துறை குற்றவாளி என சாம்சனைக் கைது செய்ய அவர் இருக்கும் பகுதிக்கு விரைந்தனர். அப்போது, சாம்சன் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை தடுத்துநிறுத்திய காவலர்கள் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.