தேர்தல் முடிவுகள் இருக்கட்டும், தேர்தல் விளம்பரங்களில் எந்தக் கட்சி முன்னிலைன்னு தெரியுமா?! | BJP spends more on political ads

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (16/05/2019)

கடைசி தொடர்பு:15:20 (16/05/2019)

தேர்தல் முடிவுகள் இருக்கட்டும், தேர்தல் விளம்பரங்களில் எந்தக் கட்சி முன்னிலைன்னு தெரியுமா?!

கூகுள், யூட்யூப், மற்றும் கூகுளின் இதர நிறுவனங்களில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வதற்காக சுமார் 27 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளன. இதில் 60% விளம்பரங்களுக்கு 17 கோடி ரூபாய் வரை பாஜக செலவிட்டுள்ளது. தேசிய அளவிலான பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 2.7 கோடி மட்டுமே செலவழித்துள்ளது.

விளம்பரங்கள் இல்லாமல் தேர்தல் பிரச்சாரங்கள் இல்லை. முன்பெல்லாம் தேர்தல் வந்தாலே சுவர்களில் இடம்பிடிக்கவும், விளம்பரம் செய்யவும் அரசியல் கட்சிகளிடையே போட்டாபோட்டி நடக்கும். ஆனால் தற்போது ஆன்லைன், சமூக வலைத்தளங்களின் காலமாக மாறிவருகிறது. எனவே அரசியல் கட்சிகளும் தங்கள் விளம்பரச்சுவர்களை சமூக வலைத்தளங்களுக்கு மாற்றிவருகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் முடிவுகள் வரவுள்ள சூழலில், எந்தெந்த கட்சிகள் டிஜிட்டல் விளம்பரங்களுக்காக எவ்வளவு செலவு செய்துள்ளன என்ற விவரம் வெளிவந்துள்ளது. 

பாஜக

கூகுள், யூட்யூப், மற்றும் கூகுளின் இதர நிறுவனங்களில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வதற்காக சுமார் 27 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளன. இதில் 60% விளம்பரங்களுக்கு 17 கோடி ரூபாய் வரை பாஜக செலவிட்டுள்ளது. தேசிய அளவிலான பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 2.7 கோடி மட்டுமே செலவழித்துள்ளது. ஒப்பீட்டளவில் காங்கிரஸ் கட்சியைவிட 6 மடங்குக்கும் அதிகமாக பாஜக செலவழித்துள்ளது. பாஜகவை அடுத்ததாக திமுக 4 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. 

திமுக

ஃபேஸ்புக் விளம்பரங்களைப் பொறுத்தவரை, பாஜக சுமார் 4 கோடி ரூபாய் வரையிலும், காங்கிரஸ் கட்சி 1.3 கோடி ரூபாய் வரையிலும் செலவிட்டுள்ளன. கடந்த 2014 தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் டிஜிட்டல் விளம்பரங்களுக்காக இரண்டு மடங்கு தொகை செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் ஒவ்வொரு கட்சியும் நேரடியாகச் செலவழித்த தொகையாகும். தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கட்சிகள் விளம்பர நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதால் இந்தக் கணக்கீட்டில் வரவில்லை.