`நிஹானின் சிரிப்பு..அம்ருதா ரியாக்ஷன்!' - வைரலாகும் பிரனய் மகன் வீடியோ | amrutha wife of pranay latest video

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (16/05/2019)

கடைசி தொடர்பு:16:57 (16/05/2019)

`நிஹானின் சிரிப்பு..அம்ருதா ரியாக்ஷன்!' - வைரலாகும் பிரனய் மகன் வீடியோ

சாதி வெறிக்கு, தன் கண்கள் முன்னமே காதல் கணவனைப் பறிகொடுத்தவர் தெலங்கானாவின் அம்ருதா. ஆறு மாத கர்ப்பிணி, துடிக்கத் துடிக்க அரிவாளுக்கு தன் இணையைப் பறிகொடுத்ததை மொத்த நாடும் பதைபதைத்துப் போய் பார்த்தது. ஜஸ்டிஸ் ஃபார் பிரணய் என்ற முகநூல் பக்கம், அம்ருதாவின் அப்பா கைது, பிறகு, ஜாமீனில் விடுதலை என்று காலம் நகர்ந்துகொண்டே இருக்க, அம்ருதா மற்றும் பிரணயின் அன்புக்குச் சாட்சியாக ஒரு ஆண் குழந்தை பிறந்தான். குழந்தை பிறந்து கிட்டத்தட்ட 5 மாதங்களில், அந்தப் பச்சிளம் சிசுவின் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே இதுவரை வெளியுலகத்துக்கு வந்திருந்த நிலையில், தற்போது அம்ருதாவும் அவர் மகன் நிஹானும் சிரித்து மகிழ்கிற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது.   

நிஹான் பிரணய்

எந்தவித பேச்சும் இல்லாத அந்த வீடியோவில் குழந்தை நிஹான் சிரித்துக்கொண்டே இருக்கிறான். பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிற ஒரு நபரின் விரல்களைப் பிடித்துக்கொண்டு விளையாடுகிறான். மகனுடைய பொக்கை வாய் சிரிப்பைப் பார்த்து அம்ருதாவும் வாய் திறந்து சிரிக்கிறார். ஆனால், அந்தச் சிரிப்பு ஏனோ அவர் கண்களை எட்டவே இல்லை. அவர்களுக்கு அருகில் பிரணய் புகைப்படமாக சிரித்துக்கொண்டிருக்கிறார்.