''விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை... உண்மையை உணரவில்லை மத்திய அரசு!’’ - பழ.நெடுமாறன் | BJP government extended the ban against LTTE , pazha nedumaran condemns it

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (16/05/2019)

கடைசி தொடர்பு:19:10 (16/05/2019)

''விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை... உண்மையை உணரவில்லை மத்திய அரசு!’’ - பழ.நெடுமாறன்

இந்த இயக்கத்தால் இந்திய மக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழலாம். ஆகவே, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சட்டவிரோத அமைப்பு என அறிவித்துத் தடை விதிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

''விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை... உண்மையை உணரவில்லை மத்திய அரசு!’’ - பழ.நெடுமாறன்

த்திய அரசு, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து, அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 1991-ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபின், இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குக் காங்கிரஸ் அரசால் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த நிலையில், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சகம் தேசத்தின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அந்தத் தடையை மேலும் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நோக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கும் எல்லைப்புற ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அமைப்பிலிருந்து விலகியவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரைத் தமிழக அரசு கண்டுபிடித்துள்ளது. இவர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடப் பயன்படுத்தப்பட இருக்கிறார்கள் என்பது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்குக் குடியேறும் மக்கள் இன்னும் தொடர்ந்து விடுதலை இயக்கத்துக்கு ஆதரவாக இணையதளங்களில் செயல்பட்டு வருகிறார்கள். இலங்கையில் விடுதலைப் புலிகள் போரில் தோல்விபெற இந்திய அரசுதான் காரணம் என்று பிரசாரங்கள் செய்யப்படுவதால், இலங்கைவாழ் தமிழ் மக்கள் மத்தியில் இந்தியாமீது அதிருப்தி நிலவிவருகிறது. இந்த இயக்கத்தால் இந்திய மக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழலாம். ஆகவே, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சட்டவிரோத அமைப்பு என அறிவித்துத் தடை விதிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ”விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது காங்கிரஸ் ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் தடை நீட்டிப்பு குறித்து பழ.நெடுமாறன்இப்போது இலங்கையில் போரும் முடிந்துவிட்டது. இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டது என்று இலங்கை அரசும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் எந்தப் பகுதியிலும் செயல்படாத விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது காங்கிரஸ் தடை விதித்ததையே பி.ஜே.பி அரசு இப்போது நீட்டிப்பு செய்திருப்பது நியாயமற்றது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கைத் தமிழர்கள் மொழி, பண்பாடு போன்றவற்றால் தமிழர்களுடன் தொடர்புடையவர்கள். இலங்கைத் தமிழர்கள் சிங்கள அரசால் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டதால், அவர்களை எதிர்த்துப் போராடினார்கள். இலங்கைத் தமிழர்களை அந்த அரசு ராணுவத்தைக் கொண்டு அடக்கியதன் காரணமாக, இலங்கையில் புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டது. ஈலங்கைத் தமிழர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தங்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டார்கள். எனவே, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் ஆதரித்தார்கள். தொடர்ந்து அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகத் தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை உணராமல், விடுதலைப் புலி இயக்கத்துக்கு இந்திய அரசுத் தடையை நீட்டித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மத்திய அரசு இப்படிச் செய்தது தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது என்பதுதான் பொருள். புலிகளுக்கு எதிரான இந்தத் தடை, தமிழர்களுக்கு எதிரான தடை. இந்தத் தடை நீட்டிப்பு குறித்து அரசு கூறும் எந்தக் காரணமும் பொருத்தமற்றது” என்றார் மிகத் தெளிவாக.

 


டிரெண்டிங் @ விகடன்