பிரதமர் மோடிக்காக ராகுல் காந்தி உருவாக்கிய சொல் - `ஆக்ஸ்போர்டு அகராதி’ சொன்ன பதில் #Modilie | Modilie, Rahul Gandhi invents a new word for Modi

வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (17/05/2019)

கடைசி தொடர்பு:10:43 (17/05/2019)

பிரதமர் மோடிக்காக ராகுல் காந்தி உருவாக்கிய சொல் - `ஆக்ஸ்போர்டு அகராதி’ சொன்ன பதில் #Modilie

மோடி

நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையிலும் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும் இடையிலான போர் ஓய்ந்தபாடில்லை. அண்மையில், ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியைக் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. அவர் தன் குடும்பத்தை ஏளனம் செய்ததுபோல தான் அவரின் குடும்பத்தைத் தரம் தாழ்த்தப்போவதில்லை என்று ராகுல்காந்தி பேசியிருந்தார். ஆனால், தற்போது ராகுல் காந்தி பதிவு செய்திருக்கும் மோடி தொடர்பான புதிய ட்வீட் சர்வதேச அளவில் பரபரப்பாகி வருகிறது. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியைப் பிரதிபலிக்கும் வகையில், அண்மையில் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டைப் பதிவு செய்திருந்தார் ராகுல். அதில், ``Modilie” என்கிற சொல்லாடலை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஆக்ஸ்போர்ட் அகராதி

``Modilie என்றால் தொடர்ந்து பொய் கூறிக் கொண்டிருப்பவர், உண்மையை மாற்றிப் பேசுபவர், பொய் சொல்லுவதற்குப் பழக்கப்பட்டவர், எவ்வித சிந்தனையும் இல்லாமல் பொய் கூறுபவர்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ட்வீட் பதிவு செய்யப்பட்ட அடுத்த நிமிடம் வைரலாகப் பரவத் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு அகராதியைப் போலப் பிரதிபலித்ததால் அவர்கள் மிரண்டு போய், இது ஃபேக் நியூஸ் , இப்படியொரு வார்த்தையே எங்களின் அகராதியில் இல்லை என்று ராகுல் காந்திக்குப் பதில் பதிவு செய்திருந்தார்கள். ராகுல் காந்தியின் பதிவின் அடுத்தகட்டமாகத் தற்போது Modilie என்கிற வலைதளமே உருவாக்கப்பட்டு பிரதமர் மோடி சொன்ன பொய்களும் உண்மைகளும் என அதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க