11,755 அடி உயரத்தில் மலை ஏற்றம்! - மோடி தியானம் செய்த குகையில் என்ன விஷேசம்? | modi treckked 2 kilometer in kedarnath

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (19/05/2019)

கடைசி தொடர்பு:10:52 (19/05/2019)

11,755 அடி உயரத்தில் மலை ஏற்றம்! - மோடி தியானம் செய்த குகையில் என்ன விஷேசம்?

தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு பிரதமர் மோடி உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு நேற்று சென்று வழிபட்டார். இமயமலையில் சுமார் 11,755 அடி உயரத்தில் மந்தாகினி நதிக்கரையில் இந்த பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. 'இந்த கோயிலுக்கு 60 வயதுக்கு மேல் செல்ல வேண்டாம் ' என்று ஏற்கெனவே மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 10 நாள்களில் மட்டும் மலை உச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். 

மோடி

இந்நிலையில், பிரதமர் மோடி கேதார்நாத் பயணம் செய்து வழிபட்டதுடன் மலை உச்சியில் 2 கிலோமீட்டர்  மலை ஏற்றம் செய்துதான், அவர் தியானத்தில் அமர்ந்த குகையை அடைந்தார்.  அந்த குகையின் பெயர் ருத்ர குகை.மோடி மலை ஏறும் காணொளியும் வெளியிட்டுள்ளது. கையில் கம்பு ஏந்திக் கொண்டு 68 வயது மோடி இளைஞர் போல  மலை ஏறிச் செல்கிறார். இந்த குகை 10 அடி உயரம் கொண்டது, கழிவறை, ஜன்னல் வசதிகள் கொண்டது. குகையின் ஜன்னலில் இருந்து பார்த்தால் கேதார்நாத் கோயிலின் தரிசனம் திவ்யமாக இருக்கும்.

இந்த குகையை தயார் செய்த நேரு இன்ஸ்டிடியூஸ்ட் ஆஃப் மவுன்டெய்னரிங்கை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது, ''கடந்த மாதமே படுக்கை வசதி, மின்சாரம், குடிநீர் வசதிகளுடன் இந்த குகையை தயார் செய்து விட்டோம். ஆனால், பூட்டிக் கிடந்தது. பிரதமர் தியானத்தை முன்னிட்டு சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டன ''எனத் தெரிவித்துள்ளனர்.

சகல வசதியுடன் .சுமார், 15 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்ட மோடி, இன்று காலை குகையில் இருந்து வெளியே வந்தார்.மீடியாக்களிடம் பேசுவதற்கு முன், கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து 'ஹர ஹர மகாதேவ் ' என்று கோஷமிடுமாறு கூறினார். 

மோடி

பின்னர் செய்தியாளர்களிடத்தில், '' கேதார்நாத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. 2013-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்துக்குப் பிறகு, கேதார்நாத்தை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தீட்டியிருந்தேன். அதன்படி, பணிகள் நடந்து வருகிறது. கேதார்நாத்தை மேம்படுத்தும் பணியில் என்னை நான் தீவிரமாக ஈடுபடுத்தி வந்தேன். கடவுளிடம் நான் எதையும் கேட்கவில்லை. அவராக விரும்பித் தர வேண்டுமே தவிர, நான் கேட்டு அவர் தரக் கூடாது. தேர்தலில் வெற்றி தாருங்கள் என்று கூட நான் கேட்கவில்லை ''என்றார்.  பிரதமர் மோடி இன்று உத்ரகாண்டின் மற்றொரு இமயமலை கோயிலான பத்ரிநாத் செல்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க