நாள் ஒன்றுக்கு ரூ.990... ஒரே நாளில் பாப்புலரான ருத்ரா குகை! | rudra Cave PM Modi meditated in can be rented for Rs 990/day

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (19/05/2019)

கடைசி தொடர்பு:14:50 (19/05/2019)

நாள் ஒன்றுக்கு ரூ.990... ஒரே நாளில் பாப்புலரான ருத்ரா குகை!

த்ரகாண்டின் கேதார்நாத் கோயில் தியானத்துக்கு பெயர் போனது.  தியானம் செய்வதற்காக கேதார்நாத் கோயிலை சுற்றிலும் பல குகைகள் உள்ளன. பிரதமர், மோடி தியானமிருந்த ருத்ரா குகை கடந்த ஆண்டுதான் அமைக்கப்பட்டது. Garhwal Mandal Vikas Nigam என்ற அமைப்பின் சார்பில்தான் இது கட்டப்பட்டது. அதிக உயரத்தில் இருந்த காரணத்தினால் பக்தர்களிடையே  அவ்வளவாக வரவேற்பில்லை. உள்ளே அதிக குளிர் வாட்டுவது முக்கிய காரணமாக இருந்தது..நாளொன்றுக்குக் கட்டணம் ரூ.3,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

ருத்ரா குகை

தொடர்ந்து 3 நாள்களுக்கு  புக் செய்ய வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், பக்தர்கள் ருத்ரா குகையை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. பக்தர்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தினால்,  நாள் ஒன்றுக்கு ரூ. 990 என விலை மாற்றி அமைக்கப்பட்டது. அதற்கு பிறகும்,  பக்தர்களிடையே வரவேற்பில்லை. ஆனால், பிரதமர் மோடி 15 மணி நேரம் இங்கே தியானம் மேற்கொண்டதால், ஒரே நாளில் பாப்புலராகி விட்டது. ரூ. 990 கட்டிதான் மோடி இங்கே தியானம் மேற்கொண்டுள்ளார். இனிமேல், இந்த குகைக்கு அதிக வரவேற்பு ஏற்படும் என்பதால். கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இங்கு, மின்சார வசதி, காலிங் பெல் வசதிகள் உண்டு. குகைக்கு வெளியே துணி துவைப்பதற்குக்  கல்லில் வசதி செய்யப்பட்டுள்ளது. 'ரூம் பாய் ' போலக் குகை பாயும் உண்டு. 24 மணி நேரமும் சர்வீஸ் கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே தங்க முடியும். காலை, மதியம், இரவு உணவுகளுடன் இரு வேளை டீயும் வழங்கப்படும். அவசர உதவிக் கோர டெலிபோன் வசதியும் உண்டு. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க