`அடுத்த பிரதமர் யார்?!' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019 | Exit poll 2019

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (19/05/2019)

கடைசி தொடர்பு:21:11 (19/05/2019)

`அடுத்த பிரதமர் யார்?!' - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் முந்தும் மோடி #EXITPolls2019

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 

மோடி - ராகுல்காந்தி

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி (இன்று) வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இவைதவிர தமிழகத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கோவாவின் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.  

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

 

 

தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதி நடைபெற்றது. இதில், 34 முதல் 38 இடங்களைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அ.தி.மு.க 4 இடங்கள் வரை கைப்பற்றலாம் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - தமிழகம்