'102  வயது, 17 நாடாளுமன்ற,  14 சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு! - அசத்தல் முதியவர் | 102-year-old voter casts vote in Himachal pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (20/05/2019)

கடைசி தொடர்பு:13:23 (20/05/2019)

'102  வயது, 17 நாடாளுமன்ற,  14 சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு! - அசத்தல் முதியவர்

1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஆனால், இமாச்சலப் பிரதேசம் போன்ற மலைப்பகுதிகள் நிறைந்த மாநிலங்களில், 5 மாதங்களுக்கு முன்னதாக, அதாவது 1951-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.  இந்தியாவின் முதல் வாக்கைப் பதிவுசெய்தவர்,  இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த  ஷ்யாம் சரண் நெகி என்பவர்தான். ஆசிரியராகப் பணிபுரிந்த ஷயாம் சரண் நெகிக்கு எலெக்ஷன் டூட்டி போடப்பட்டது.  கின்னார் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தேர்தல் அலுவலர் பணியில் இருந்த நெகி, அதிகாலை 7 மணிக்கே தன் வாக்கைப் பதிவுசெய்துவிட்டு, பணியைத் தொடங்கினார்.

இந்தியாவின் முதல் வாக்கு பதிவு செய்த முதியவர்

இந்தியாவிலேயே முதல் வாக்குப்பதிவு செய்தவர் இவர்தான் என்பது பின்னர் தெரியவந்தது. தற்போது, கல்பா என்ற இடத்தில் வசித்து வரும் நெகி,  இதுவரை 17 நாடாளுமன்றத் தேர்தல் 14  சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு அளித்துள்ளார். பஞ்சாயத்து தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை.  தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று வாக்களிக்க நெகியை வாகனத்தில் அழைத்துவந்தனர். வாக்குச்சாவடியில் பாரம்பர்ய துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து,  நெகி 31- வது முறையாக சினி தொகுதிக்காக தன் வாக்கைப் பதிவுசெய்தார்.  தற்போது, 102 வயதான நெகி, நேர்மையாக ஊக்கத்துடன் பணிபுரிபவர்களைத் தேர்வுசெய்யுங்கள்'  என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். எனக்கு அடுத்த தேர்தலிலும் வாக்களிக்க ஆசைதான். ஆனால், 'தான் பதிவு செய்யும் கடைசி வாக்கு இதுவாகத்தான் இருக்கும்' என்றும் உருக்கமாகத் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க