தேர்தலுக்குப் பிந்தைய முடிவு! - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம் | Modi most preferred choice for PM says suvey

வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (21/05/2019)

கடைசி தொடர்பு:14:13 (21/05/2019)

தேர்தலுக்குப் பிந்தைய முடிவு! - பிரதமர் வேட்பாளர்களிலும் மோடிக்கே முதலிடம்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லப்படுகிற நிலையில், திங்கள்கிழமை பிரதமர் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு அதிகம் என்ற ஆய்விலும் மோடியே முதலிடம் பிடித்துள்ளார். 

பிரதமர்

The Hindu and CSDS-Lokniti நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், பிரதமருக்கு  44 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 24 சதவிகித மக்களின்  ஆதரவு கிடைத்துள்ளது. இந்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் இடங்களில் இளைஞர்கள், இளம் பெண்கள் மோடிக்கு அதிக ஆதரவாக உள்ளனர்.  

பட்டதாரிகளிடமும் தற்போதைய பிரதமருக்கே  அதிக ஆதரவு உள்ளது. இந்தி அதிகம் பேசும் மாநிலங்களில்,  உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே மோடி பிரதமர் வேட்பாளர் என்கிற தாக்கம் இல்லை. இங்கே,  அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் முகத்தை வைத்து வாக்குகள் விழுந்துள்ளன. மோடியின் தாக்கம் இந்த மாநிலத்தில் அதிகமாக இல்லை.  மோடியுடன் ஒப்பிடுகையில், ராகுல் காந்தி பாப்புலாரிட்டியிலும் மிகப் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

தேர்தல் முடிவுகள், தேர்தலுக்குப் பிந்தைய பிரதமர் வேட்பாளர்களில் ஆதரவு, இரண்டிலும் மோடி முந்தியிருக்கிறார். இதனால், உற்சாகம் அடைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி, டெல்லி அசோகா ஹோட்டலில் கூட்டணியில் உள்ள 39 கட்சித் தலைவர்களை விருந்துக்கு அழைத்துள்ளது. விருந்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

இதற்கிடையே, அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிபெறுவது கடினம்தான்  என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க